கிரகங்களின் அரசனான சூரியன்,  கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாற்றம் வடக்கில் இருந்து, தெற்கு நோக்கிதாக இருக்கும். சூரியன் கிரகம், ஜூலை மாதம் 16ம் தேதி இரவு 10.50 மணிக்கு கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  ஜூலை 17ம் தேதி ஆடி மாத பிறப்பு உள்ள நிலையில், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் இந்த மாதம்  நடைபெற உள்ளது.  கடக ராசியில் சூரியனின் சஞ்சாரம்  சிலருக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும் என்றாலும், இந்த சூரிய பெயர்ச்சியினால், சில ராசிகள் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியனின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், சிக்கலில் சிக்கப் போகும் ராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


தனுசு ராசி:


சூரியனின் இந்த சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களின் சிரமங்களை அதிகரிக்கும். தற்போது தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி  உள்ளது. இந்த ராசிக்கு ஏழரை நாட்டு சனியின் பலன் 2023 ஜனவரி வரை இருக்கும். சூரியனின் இந்த பெயர்ச்சி காலத்தில், வாகனத்தைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். 


மகர ராசி:


சூரியனின் இந்த ராசி மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் வரலாம். நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது தீவிரமாக யோசனை செய்து  முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினருடன் ஏற்படும் வாக்குவாதம் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக நிலைமையை கையாளவும்.


மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்


மீன ராசி:


சூரியன் மீன ராசியில் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த சஞ்சாரம்  மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். மேலதிகாரியின் அதிருப்திக்கும் ஆளாகாத வகையில் கவனத்துடன் விஷயங்களை கையாளவும். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 7 வரை எச்சரிக்கை காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ