SBI Loan: MCLR விகிதங்களை உயர்த்திய எஸ்பிஐ... உயரும் EMI

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா MCLR விகிதங்களை அதிகரிள்ளதால்,  வீடு, கார் அல்லது தனிநபர்  கடன்களின் வட்டி விகிதம் உயர்வதால், உங்கள் EMI தொகையும் அதிகரிக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 11:35 AM IST
  • சில்லறை கடன் வாங்குபவர்களுக்கு எம்சிஎல்ஆர் அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் தாக்கம்.
  • MCLR என்பது வங்கிகள் கடன் கொடுக்க அனுமதிக்கப்படாத குறைந்தபட்ச கடன் விகிதமாகும்.
  • மற்ற வங்கிகளும் ஜூலை மாதத்தில் எம்சிஎல்ஆர் விகிதங்களை அதிகரித்தன.
SBI Loan: MCLR விகிதங்களை உயர்த்திய எஸ்பிஐ... உயரும் EMI title=

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) Marginal Cost of Funds Based Lending Rates (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடுள்ள தகவலில், எம்சிஎல்ஆர்  விகிதத்தை ஓராண்டு காலத்திற்கு, தற்போதுள்ள 7.40 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக அதிகரிக்க வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஆறு மாத காலத்திற்கு எம்சிஎல்ஆர் விகிதம்,  7.35 சதவீதத்தில் இருந்து 7.45 சதவீதமாக உயர்த்தப்படும். இரண்டு ஆண்டுகளில் எம்சிஎல்ஆர் 7.60 சதவீதத்தில் இருந்து 7.70 சதவீதமாக உயர்த்தப்படும்.  மூன்று ஆண்டுகளில் 7.7 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

சில்லறை கடன் வாங்குபவர்களுக்கு எம்சிஎல்ஆர் அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் தாக்கம்

MCLR விகிதம் அதிகரித்துள்ளதன காரணமாக வீடுகள், கார்கள் அல்லது தனிநபர்களுக்கான சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து., அதன் காரணமாக,  மாதாந்திர தவணை தொகையும் (EMI) அதிகரிக்கும். SBI வீட்டுக் கடன் விகிதங்கள் CIBIL ஸ்கோரைப் பொறுத்து 7.05 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரை மாறுபடும். எஸ்பிஐ வாகன கடன் வட்டி விகிதம் 7.45 சதவீதம் முதல் 8.15 சதவீதம் வரை மாறுபடும்.

மேலும் படிக்க | SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும்

MCLR  என்றால் என்ன?

MCLR என்பது வங்கிகள் கடன் கொடுக்க அனுமதிக்கப்படாத குறைந்தபட்ச கடன் விகிதமாகும். இந்த விகிதத்தின் அடிப்படையில், வங்கிகள் நுகர்வோர் கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும். இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன் மற்றும் புதிய கடன்களுக்கும் வட்டி விகிதம் மாறும்.

ஒவ்வொரு மாதமும், சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வங்கிகள் தங்கள் MCLR விகிதத்தை மாற்றியமைக்கின்றன. ஒரே இரவில் இருந்து மூன்று ஆண்டுகள் வரையிலான வெவ்வேறு தவணைக்காலங்களுக்கு MCLR வேறுபட்டதாக இருக்கும். இது நிதியின் விளிம்புச் செலவு, இயக்கச் செலவு, ரொக்க இருப்பு விகிதம் (CRR) மற்றும் தவணைக்கால பிரீமியம் போன்ற கூறுகளின் அடிப்படையில் பெறப்படுகிறது.

மற்ற வங்கிகளும் ஜூலை மாதத்தில் எம்சிஎல்ஆர் விகிதங்களை அதிகரித்தன

பாங்க் ஆஃப் பரோடா குறிப்பிட்ட தவணைக்கால கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) அடிப்படையில் நிதிகளின் அடிப்படைச் செலவை 10-15 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது. புதிய கட்டணங்கள் ஜூலை 12 முதல் அமலுக்கு வருகிறது. தனியார் கடன் வழங்குநரான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பல்வேறு தவணைக்காலங்களில் 10 முதல் 15 அடிப்படைப் புள்ளிகள் வரை எம்சிஎல்ஆர்  விகிதத்தை அதிகரித்தது. நிதிகளின் விளிம்புச் செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) புதிய விகிதங்கள் ஜூலை 8, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News