சுக்கிரன் தாக்கத்தால் சிக்கல் வரலாம்.. இந்த ராசிகாரர்கள் ஆகஸ்ட் 7 வரை கவனம் தேவை

Venus Transit 2022: சுக்கிரன் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கலாம். இந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2022, 02:07 PM IST
  • கடகத்தில் சுக்கிரனின் கோச்சாரம் 12 ஆம் வீட்டில் நடக்கிறது.
  • இந்த மாற்றம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இல்லை.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்.
சுக்கிரன் தாக்கத்தால் சிக்கல் வரலாம்.. இந்த ராசிகாரர்கள் ஆகஸ்ட் 7 வரை கவனம் தேவை title=

சுக்கிரன் ராசி பரிவர்தனை 2022: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுக்கிரன் செல்வம், அதிர்ஷ்டம், மகிமை மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறது. ஜூலை 13ம் தேதி காலை 10.50 மணிக்கு சுக்கிரன் கிரகம் ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசிக்குள் நுழைந்தார். ஆகஸ்ட் 7 வரை சுக்கிரன் இந்த ராசியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் சுக்கிரன் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கலாம். இந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடகம்:

கடகத்தில் சுக்கிரனின் கோச்சாரம் 12 ஆம் வீட்டில் நடக்கிறது. இந்த மாற்றம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இல்லை. இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம்.

கன்னி:

சுக்கிரன் மாற்றம் கன்னி ராசியில் பத்தாம் வீட்டில் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் கலவையான விளைவுகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை, எச்சரிக்கை தேவை 

விருச்சிகம்:

விருச்சிகத்தின் எட்டாம் வீட்டில் சுக்கிரனின் கோச்சாரம் நடக்கிறது. இந்த மாற்றம் உங்களுக்கு நல்லதாக கருதப்படவில்லை. உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். செலவுகள் கூடும்.

தனுசு:

தனுசு ராசியின் ஏழாவது வீட்டில் சுக்கிரனின் மாற்றம் நடக்கிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் தகராறு ஏற்படலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்பவர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மகரம்:

சுக்கிரன் மகர ராசியில் ஆறாம் வீட்டில் கோச்சாரம் செய்கிறார். இந்த நேரத்தில் உங்கள் காதல் உறவில் பதற்றம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

கும்பம்:

சுக்கிரன் கும்ப ராசியில் ஐந்தாம் வீட்டில் கோச்சாரம் செய்கிறார். இருப்பினும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரக்கூடும். இந்த காலகட்டத்தில், உங்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மீனம்:

மீன ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரனின் மாற்றம் உள்ளது. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகலாம். பண விஷயத்தில் அதிகபட்ச எச்சரிக்கை தேவை. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மன்னிக்க மனமில்லாதவர்களின் மன நிம்மதியை சொல்லும் ஜாதகம்: சனியின் தாக்கம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News