சூரியன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழையப் போகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏர்படுத்தும். சூரியனும் இதற்கு விதிவிலக்கல்ல. சூரியன் தன் சொந்த ராசிக்கு வருவதால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆகஸ்ட் 17ம் தேதி காலை 07:14 மணிக்கு சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைவார். சூரியனின் ராசி மாற்றத்தால் 12 ராசிகளில் ஏற்படப்போகும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்:


சூரியன் மேஷ ராசிக்கு ஐந்தாம் வீட்டில் நுழையவுள்ளார். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவீர்கள்.


ரிஷபம்:


உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் சொத்து, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.


மிதுனம்:


உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சூரியனின் கோச்சாரம் நடக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் உறவுகள் மேம்படும். தொழிலில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.


கடகம்:


கடக ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் ராசி மாற்றம் நடக்கிறது. இதனால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி 2022: இந்த 4 ராசிக்காரர்களின் காட்டில் பணமழை 


சிம்மம்:


சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். லக்னத்தில் சூரியன் நுழைவதால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


கன்னி:


உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பயணங்களை மேற்கொள்ளக்கூடும். இந்த பயணங்களால் அனுகூலமான விளைவுகள் ஏர்படும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


துலாம்:


11வது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்தக் காலகட்டத்தில் கௌரவம் உயரும். உங்கள் தொழிலில் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.


விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியனின் ராசி மாற்றம் நடக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். கோபத்தைத் தவிர்க்கவும்.


தனுசு:


தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான பலன்களைக் காணலாம்.


மகரம்:


மகர ராசியின் எட்டாம் வீட்டில் சூரியன் மாறுவது அசுபமானது. இந்த காலகட்டத்தில் வாகனத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


கும்பம்:


கும்ப ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் கோச்சாரம் ஆவதால் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். துணையுடன் விரிசல் வரலாம்.


மீனம்:


மீன ராசியின் ஆறாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரன் நிகழவுள்ளதால் அதிகப்படியான லாபம் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அருள் மழை, மகிழ்ச்சி திக்குமுக்காட வைக்கும்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ