சூரிய பெயர்ச்சி ஆகஸ்ட் 2022: சிம்மராசியில் சூரியன் மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள்

Sun in Leo: சூரிய பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. சிம்மராசியில் சூரியன் செல்வதால், மேஷம் முதல் மிதுனம் வரையிலான ராசிகளுக்கான பலன்கள் இவை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2022, 07:59 AM IST
  • இன்னும் சில நாட்களில் சூரிய பெயர்ச்சி
  • சிம்மராசியில் சூரியன் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்?
  • மேஷம் முதல் மிதுனம் வரையிலான ராசிகளுக்கான பலன்கள்
சூரிய பெயர்ச்சி ஆகஸ்ட் 2022: சிம்மராசியில் சூரியன் மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள் title=

Sun Transit in August: நவகிரகங்களின் அரசர் என்று அறியப்படும் சூரியன் தனது சொந்த வீடான சிம்மத்திற்கு 17 ஆகஸ்ட் 2022 அன்று காலை 07:14 மணிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சூரியப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 11 மாதங்களுக்குப் பிறகு, சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருவது மூலதிரிகோணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவானின் இந்தப் பெயர்ச்சி அதிகாரம் மிக்கவர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும்மிகவும் நன்றாக இருக்கும். படைப்பாற்றலின் அடையாளமாக இருக்கும் சிம்மராசியில் சூரியன் இருப்பது கலைத்துறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சூரிய பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. சிம்மராசியில் சூரியன் செல்வதால், மேஷம் முதல் மிதுனம் வரையிலான ராசிகளுக்கான பலன்கள் என்னவாக இருக்கும்? தெரிந்துக் கொள்ளுங்கள்...

மேலும் படிக்க | சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகும் ராசி

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு, சூரியன் அவர்களின் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார், இது மேஷ ராசியினருக்கு கல்வி, அன்பு உறவுகள், குழந்தைகள் மற்றும் பூர்வ புண்ணியத்திற்கான வீடாக இருக்கிறது. எனவே சூரியனின் பெயர்ச்சியால், மாணவர்களுக்கு நல்லது நடக்கும். காதலர்களுக்கு அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேறி வாழ்க்கை உல்லாசமாக இருக்கும்.

ஆனால், சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் காதல் வாழ்க்கையில் சில  ஈகோ பிரச்சனைகளையும் கொண்டு வரும் என்பதால் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யவும், அவர்களுடன் நேரத்தைச் செலவழித்து உங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் இதுவே நேரம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பணியிடத்தில், உங்களுடைய கடின உழைப்பின் பலன்களைப் பெறுவீர்கள். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். அமைதியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

 மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, உங்கள் தாய், இல்லற வாழ்க்கை, வீடு, வாகனம், சொத்து ஆகியவற்றைக் குறிக்கும் நான்காவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, உங்கள் நான்காவது வீட்டின் மீது சூரியனின் பெயர்ச்சி உங்கள் தாயின் ஆற்றலை அதிகரிக்கும்.

தேவையற்ற ஈகோ மோதல்களால், உங்கள் வீட்டின் மகிழ்ச்சியான சூழ்நிலை பாதிக்கப்படலாம். எனவே அமைதியாக இருப்பது நல்லது. ரிஷப ராசிக்காரர்களுக்கு சொத்து, வாகனம் வாங்க இது மிகவும் நல்ல நேரம்.

சூரியன் உங்களின் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு நல்ல நேரம் இது. உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்கள் பேச்சை மதிப்பார்கள். பணியிடத்தில் அதிக உற்சாகத்துடன் வேலை செய்யலாம்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மிதுனம்: உடன்பிறந்தவர்கள், பொழுதுபோக்குகள், குறுகிய தூரப் பயணம், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் குறிக்கும் மூன்றாவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார், மேலும் சூரியன் தன் பார்வையில் இங்கே இருக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில், மிதுன ராசிக்காரர்களுக்கு உடன்பிறந்தவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். 

இந்த சூரிய பெயர்ச்சி, உடன்பிறப்புகள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. அந்தப் பயணம், உங்களுடைய பிணைப்பை அவர்களுடன் மேலும் வலுப்படுத்தும். 

மார்க்கெட்டிங், சமூக ஊடகங்கள் அல்லது தகவல்தொடர்பு போன்ற பணிகளில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் நல்லதாக இருக்கும். சூரியன் உங்கள் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால்,  தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும், பாராட்டுக்களை பெறும் நேரம் இது.

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News