ராசி மாறியது செவ்வாய் கிரகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், பம்பர் அதிர்ஷ்டம்

Mars Transit: செவ்வாயின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கும். சிலர் பல சிரமங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 11, 2022, 05:39 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.
  • இந்த காலத்தில் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.
  • வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும்.
ராசி மாறியது செவ்வாய் கிரகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், பம்பர் அதிர்ஷ்டம் title=

செவ்வாய் பெயர்ச்சி 2022: ஆகஸ்ட் 10 அன்று செவ்வாய் தனது ராசியை மாற்றியது. செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. செவ்வாயின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கும். சிலர் பல சிரமங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். செவ்வாய் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். பழைய சச்சரவுகள் அகலும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பண வரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | அங்காரக தோஷத்தில் இருந்து விடுதலை! இனி 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் 

சிம்மம்:

செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த பணியை செய்தாலும் அதில் வெற்றியை காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய கடனில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சொத்து மற்றும் வாகனங்கள் வாங்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்களுக்கு வெற்றி உண்டாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அருள் மழை, மகிழ்ச்சி திக்குமுக்காட வைக்கும்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News