Sun Transit : கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செப்டம்பர் 16, 2024 அன்று 19:29 மணிக்கு நடைபெறவிருக்கிறது. ஆற்றலின் முக்கிய ஆதாரமான சூரியன், நவக்கிரகங்களுள் முக்கியமானது, சூரியனை சுற்றியே பிற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் இல்லாமல், பொதுவாக வாழ்க்கை சாத்தியமில்லை. சூரியனின் ஆசீர்வாதம் இல்லாமல், யாரும் வாழ்க்கையில் உயர் பதவிகளை வகிக்கவோ அல்லது பணக்காரராக உயரவோ முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருந்தபோதிலும், சூரியனின் பெயர்ச்சி அடிப்படையில், சூரியனின் தாக்கம் மாதந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் எந்த நிலையில் இருந்தாலும், சூரிய பகவானின் சஞ்சார மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று கன்னிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் 5 ராசிகளுக்கு மோசமானதாக இருக்கும்.


கன்னியில் சூரியன் சஞ்சாரம் மோசமான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள்


ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷபம ராசிக்காரர்களுக்கு கன்னிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சி தொழிலில் முடக்கத்தைத் தரும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும், அதன் பலன் என்னவென்று பார்த்தால், மனதில் விரக்தியாகவே எஞ்சும். வெளிநாட்டு தொடர்புள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடுகள் செய்யும்போது, லாபம் கொடுக்கும் என்று நினைத்தவை, எதிர்மாறாக நட்டத்தை கொடுக்கும் சூழல் உருவாகலாம். காதல் வாழ்க்கையில் கவனம் கொடுக்காவிட்டால் பிரச்சனைகள் அதிகமாகும்.  


மேலும் படிக்க | Weekly Horoscope September 9 to September 15 2024: இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 9 முதல் 15 2024 வரை, 12 ராசிக்கான பலன் இதோ


விருச்சிகம் (Scorpio Zodiac Sign) : சூரியனின் கன்னி ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கலாம், நீண்ட கால முயற்சிகள் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாற்றங்கள் வரும். தொழில் வாழ்க்கையில் ஓரளவு நிம்மதி கிடைத்தாலும், குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. விநாயகர் வழிபாடு பாதிப்புகளைக் குறைக்கும்.


கும்பம் (Aquarius Zodiac Sign) : சூரியனின் கன்னி ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பிரச்சனைகள் தோன்றும். ஆள் பலம் குறையும், வாழ்க்கை துணையின் ஆதரவு பெற போராட வேண்டியிருக்கும், அவர்களுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும். சூரிய பகவானின் சஞ்சார மாற்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Vinayagar chaturthi 2024: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி! விநாயகரின் பல நூறு அவதாரங்கள்! இது 40 அடி கணபதி அவதாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ