ஜோதிடத்தின் அடிப்படையில் நமது செயல்களுக்கு ஏற்றவாறே நமது வாழ்க்கை அமைகிறது. அது எப்படி இருக்கும் என்பதை ஊகமாக கணிக்கும் கலை ஜோதிடம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரோதி ஆண்டின் ஆனி 13ம் நாள் தேய்பிறை சஷ்டி, சதயம் நட்சத்திரம் கூடிய இன்று 27-06-2024 


மேஷம் 


வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ரகசியமான சில செயல்கள் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வுகள் விலகும். 


ரிஷபம் 
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். கை தொழிலில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயத்தை அடைவீர்கள். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். விருப்பமான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேளாண்மை துறைகளில் இருந்த குழப்பங்கள் மறையும்.  


மிதுனம் 
கற்றலில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசியல் வட்டங்களில் முக்கியத்துவம் உண்டாகும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். செயல்திறனில் ஒரு விதமான மாற்றங்கள் காணப்படும். மருத்துவ துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். மூத்த சகோதரர்களால் சில விரயங்கள் ஏற்படும்.  


கடகம் 
தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  


மேலும் படிக்க | ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ


சிம்மம் 
காப்பீடு தொடர்பான புரிதல்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய கவலைகள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். வெளிநாட்டு பயணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். 


கன்னி 
நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துகிறீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும்.  


துலாம் 
தாய்மாமன் வழியில் புரிதல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விரயங்கள் ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதி இன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும்.  


விருச்சிகம் 
குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். கலைத்துறைகளில் மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும்.  


தனுசு 
உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பாடங்களில் இருந்து குழப்பங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.  


மேலும் படிக்க | ஜூலை மாத சுக்கிரன் பெயர்ச்சியால் மனதில் கவலைகள் அதிகரிக்கும்! எச்சரிக்கை அவசியம்!


மகரம் 
உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றமான சூழல் அமையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களில் தலையிடாமல் இருக்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.  


கும்பம் 
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தோற்ற பொழுவில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் பொறுமையை கையாளவும். 


மீனம் 
தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கையாளவும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும்.  


(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கத்தால் ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ஜாலியான ராஜவாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ