தைரியத்தைத் தரும் செவ்வாய் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். செவ்வாயின் ரிஷப ராசிப் பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களின் வாழ்வில் பணம் வந்து குவியும். அதோடு, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குரு பகவான் ரிஷப ராசியில் இருக்கிறார். தற்போது தனது சொந்த ராசியான மேஷத்தில் இருக்கும் செவ்வாய் பகவான், ஜூலை 12ல் ரிஷப ராசிக்குள் நுழைவார். செவ்வாய் ரிஷப ராசியில் தங்கியிருக்கும் போது, சுமார் 46 நாட்கள் தேவகுருவான குரு பகவானுடன் ஒரே வீட்டில் இருப்பார். அதன் பிறகு செவ்வாய் ஆகஸ்ட் 26-ம் தேதி மிதுன ராசிக்கு மாறுகிறார். ரிஷப ராசியில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருக்கும் செவ்வாய், ஆறு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார். அந்த ராசியான ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
ரிஷபம்: ராசி மணடலத்தின் முதல் ராசியான மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய், இன்னும் சில நாட்களில், ரிஷபத்திற்கு செல்லும்போது, ரிஷப ராசிக்காரர்கள் முழு ஆற்றலுடன் இருப்பார்கள். ஆனால், எதிர்பாராத ஆடம்பரங்கள் பெருகும் என்பதால் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். பணியில் இருப்பவர்கள் வேலையில் திருப்தி அடைவார்கள், வாழ்க்கை துணையுடனான உறவில் சிக்கல் ஏற்படலாம். அதை அலட்சியப்படுத்தாமல் கவனமாக பேசித் தீர்க்கவும்.
சிம்மம்: சிம்ம ராசியில் செவ்வாய் வருவதால், நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வந்த சிம்ம ராசிக்காரர்களின் பிரச்சனைகள் தீரும். இது வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகளை உருவாகும். நிலுவையில் இருந்து கவலைக் கொடுத்து வந்த பண விவகார்னக்கல் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் உறவுகள் நன்றாக இருக்கும். அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். தந்தையின் முழு ஆதரவும் ஆசியுடனும், உங்கள் வேலை மற்றும் மன பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கன்னி: தொழில் வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளைப் பெற்று மனமகிழ்ச்சியடையும் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும், நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது என்பதுசம்பளம் உயர்வில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்களால் நல்ல பெயர் கிடைக்கும். இது உங்கள் கௌரவத்தையும் புகழையும் அதிகரிக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும், எதிர்பார்த்திருந்த புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒரு படி பின் தங்க வேண்டியிருக்கும். சொத்து, வாகனம் வாங்க நினைத்தால் அந்த ஆசையும் இந்தக் காலத்தில் நிறைவேறும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். திருமண வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும்.
மகரம்: மகரம் ராசிக்காரர்கள் வேலையில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள், புதிய பதவி கிடைக்கும். துல்லியமாக சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். நிலுவையில் நின்ற காரியங்கள் அனைத்தும் தற்போது கைகூடும்.
மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும், தொழிலில் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பும் கிடைக்கும். பல்வேறு மூலங்களில் இருந்து வருமானம் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல காலம் இது. வருமானம் அதிகரிக்கும், குடும்பத் தகராறுகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த சமயத்தில், சிக்கிய பணத்தை திரும்பப் பெற முடியும்.
மேலும் படிக்க | சூரியனை எப்படி வணங்கினால் அருளாசி பெறலாம்? பவிஷ்ய புராணம் சொல்லும் சூரிய வழிபாடு!
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ