முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கத்தால் ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ஜாலியான ராஜவாழ்க்கை

Monthly Horoscope July, 2024: ஜூலை மாதம் நிகழவுள்ள கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2024, 02:37 PM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு, ஜூலை மாதம் நிதி ஆதாயங்கள் நிறைந்ததாக இருக்கும்.
  • உங்கள் வசதிகள் பெருகும்.
  • உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.
முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கத்தால் ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ஜாலியான ராஜவாழ்க்கை title=

Monthly Horoscope July, 2024: ஜூலை மாதத்தில் செவ்வாய், புதன், சூரியன், சுக்கிரன் உள்ளிட்ட 4 கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும். முதலில், சுக்கிரன் மிதுனத்தில் இருந்து கடகத்தில் பெயர்ச்சி ஆவார். அங்கு ஏற்கனவே இருக்கும் புதனுடன் அவர் இணைவார். இதன் காரணமாக லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகும். அதன் பிறகு, செவ்வாய் மேஷத்திலிருந்து ரிஷபத்திற்குள் நுழைந்து சூரியன் மற்றும் குருவுடன் இணைவார். பின்னர் சூரியன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சி ஆவார். சூரியனுக்குப் பிறகு, புதன் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். இறுதியாக, சுக்கிரன் மீண்டும் தனது ராசியை மாற்றி சிம்ம ராசியில் நுழைந்து மீண்டும் லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறார். 

மொத்தத்தில் ஜூலை மாதம் பல கிரக மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் மற்றும் சேர்க்கையால், பல ராஜயோகங்களும் உருவாகின்றன. ஜூலை மாதம் நிகழவுள்ள கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இந்த ஜுலை மாதம் பொற்காலமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

Lucky Zodiac Signs of July 2024

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நடக்கவுள்ள கிரகப் பெயர்ச்சியால் திடீர் செல்வம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். முக்கிய நபர்களுடனான உங்கள் தொடர்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் தொழிலில் நேரடியான பலன்களைப் பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். இவற்றால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இல்லையெனில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விவேகத்துடன் செயல்படவும்.

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்கு ஜூலை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்கள் மனதில் ஒருவித குழப்பம் இருக்கும். ஆனால் கடின உழைப்பால் உங்கள் தைரியம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். இந்த மாதம் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள், வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும் யாரிடமும் கோபப்படாமல் மென்மையாக நடந்து கொள்வது நல்லது. இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் சில பூஜைகள் அல்லது சுப காரியங்கள் ஏற்பாடு செய்யப்படலாம்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசியினருக்கு ஜூலை மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். இந்த மாதம் ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். அரசுத் துறையில் மரியாதையைப் பெறுவீர்கள். உத்தியோகபூர்வ வர்க்கத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். நண்பர்களிடம் கவனமாக இருங்கள், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

மேலும் படிக்க | குருவுடன் இணைந்து வரம் அளிக்கும் செவ்வாய்! ரிஷபத்தில் அங்காரகனின் அருள்மழை!

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்களுக்கு, ஜூலை மாதம் நிதி ஆதாயங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வசதிகள் பெருகும். உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். இந்த மாதம் நிலம், கட்டிடம், வாகனம் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கை வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஒருபுறம், உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும், மறுபுறம், நீங்கள் செல்வத்தையும் அறிவையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களின் வசதிகள் பெருகும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், மாதத்தின் நடுப்பகுதியில் சில கடினமான நேரங்களை சந்திக்க நேரிடும். நிதி நன்மைகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.  இந்த மாதம் தேவையற்ற பயணங்களை செய்ய நேரிடும். எனினும் மாத இறுதியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 4 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... பண வரவு அதிகமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News