வீட்டில் அடிக்கடி பால் பொங்கி வழிகிறதா? அப்போ ஜாக்கிரதை தேவை
Tamil Vastu Tips: அடிக்கடி ஒரு வீட்டில் பால் பொங்கி வழிந்தால் அவ்வளவு நல்லது அல்ல என்கிறது ஆன்மீகம். பால் காய்ச்சி அடிக்கடி கெட்டுப் போவதும், இது போல பொங்கி வழியும் போதும் அங்கு துர்சக்திகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
உங்கள் வீட்டில் அலட்சியத்தால் நடைபெறும் பலவித செயல்களுக்கு பின்னால் எதிர்காலமும், நிகழ்காலமும் அடங்கி உள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவற்றுள் ஒன்று தான் பால் பொங்கி கீழே ஊற்றுவது. பொதுவாக, அடிக்கடி பால் பொங்குவது என்பது நம்முடைய அஜாக்கிரதையால் நிகழ்வது ஆகும். இதற்கு முக்கிய காரணம் பாலை காய்ச்சும்போது நாம் அலட்சியமாக நடந்துக்கொள்வது தான். எனவே இப்படி அடிக்கடி ஒரு வீட்டில் பால் பொங்கி வழிந்தால் குடும்பத்திற்கு நல்லது இல்லை என்று ஆன்மீகம் கூறுகிறது. அதனபடி பால் காய்ச்சி கெட்டுப் போவதும், பால் பொங்கி வழிவது, இவையெல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் அசுபமாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பால் சந்திரனின் காரணியாக கருதப்படுகிறது. அதனால்தான் திடீரென பால் திரிந்துப் போவது அசுபமாக கருதப்படுகிறது. இது வீட்டில் வசிப்பவர்களுக்கு மன உளைச்சலை தரும். இதனுடன், பொருளாதார நிலையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | Astro: இந்த ‘ராசி’ ஜோடிகள் 'MADE FOR EACH OTHER' தம்பதிகளாக இருப்பார்கள்!
செவ்வாய் கிரகத்தின் காரணியாக நெருப்பு கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் சந்திரன் இரண்டும் எதிர் இயல்புடைய கிரகங்கள். அத்தகைய சூழ்நிலையில், கொதிக்கும் போது பால் சிந்துவது அசுபமானது. இது வீட்டில் வசிப்பவர்களின் அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும்.
அடிக்கடி பால் பொங்குனால் அது வாஸ்து குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இது நிதி நெருக்கடியை அதிகரிக்கலாம்.
அடிக்கடி பால் பொங்கி வழிந்தால் அடுப்பை துடைப்பதும் ஆக இருந்து கொண்டிருந்தால் அங்கும் துர்சக்திகள் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இடங்களில் அடிக்கடி சண்டையும், சச்சரவுகளும், பிரச்சினைகளும் தலைதூக்கும். தேவையே இல்லாமல் கணவன், மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவது, கைகலப்பு நடப்பது அல்லது வம்பு வழக்குகளில் சிக்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும்.
அதேபோல் காலையில் பால் வாங்குவது அல்லது யாரானும் பால் வாங்குவதை நீங்கள் கண்டால், அது ஒரு நல்ல அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள் . வரும் நாட்களில் உங்களுக்கு நல்லது நடக்கும் என்று அர்த்தம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sun transit: பொங்கலை பொங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாட சூரியப் பெயர்ச்சி பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ