துடைப்பம் தானேன்னு சாதாரணமா நினைச்சிடாதிங்க, வறுமை ஏற்படலாம்

Vastu Tips in Tamil: வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். எனவே  உங்கள் வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் பழைய துடைப்பத்தை என்ன செய்யலாம் என்றும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2022, 11:09 AM IST
  • துடைப்பத்தை எங்கு எப்படி வைப்பது.
  • பழைய துடைப்பத்தை என்ன செய்வது.
  • எந்த நாளில் துடைப்பம் வாங்கலாம்.
துடைப்பம் தானேன்னு சாதாரணமா நினைச்சிடாதிங்க, வறுமை ஏற்படலாம் title=

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்தும் துடைப்பம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த துடைப்பம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். அதன்படி உங்கள் வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும், துடைப்பம் தொடர்பான குறிப்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

* இந்து மத நம்பிக்கைகளின்படி, துடைப்பத்தை நிற்க வைக்கக்கூடாது என்பார்கள், ஏனெனில் இவை வீட்டில் எதிர்மறையான விளைவை அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை கால் படாத இடத்தில் படுக்க வையுங்கள்.

மேலும் படிக்க | பணமழை கொட்ட இந்த நேரத்துல கற்பூரத்த ஏத்துங்க, லட்சுமி கடாட்சம் பெருகும்

* அதேபோல் நாம் பயன்படுத்தும் துடைப்பம் எந்த திசையில் வைக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். அதன்படி துடைப்பத்தை மேற்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்க முயற்சி செய்யுங்கள். மறுபுறம் துடைப்பத்தை வடகிழக்கு மற்றும் சமையலறையில் வைக்கக்கூடாது. மேலும் மொட்டை மாடியில் அல்லது வீட்டிற்கு வெளியேயும் துடைப்பத்தை வைக்கக்கூடாது, அப்படி செய்வது திருட்டு சம்பவங்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

* பெரும்பாலும் வீட்டில் துடைப்பத்தை தலைகீழாக வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது வீட்டில் முரண்பாடு அதிகரிக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் டென்சனும் அதிகரிக்கும்.

* துடைப்பம் சுத்தம் செய்யும் போது அதில் முடிகள் சிக்கிக்கொண்டிருக்கும். அந்த முடிகளை எடுத்து குப்பைக்கூடையில் போட்டு விட்டுதான் அதை சுத்தமாக வைக்க வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் என்பதால் துடைப்பத்தை சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும்.

* வாஸ்து படி, நீங்கள் சமைக்கும் இடத்திலோ அல்லது சாப்பிடும் இடத்திலோ துடைப்பம் வைக்கக்கூடாது, ஏனெனில் அது வீட்டில் தானியங்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் காரணமாக, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் குறையக்கூடும்.

* அதேபோல் உங்களிடம் இருக்கும் பழைய துடைப்பம் இருந்தால் அதை முடிந்தவரை செவ்வாய், வெள்ளி இந்த தினங்களில் குப்பையில் தூக்கி போடாதீர்கள். மற்ற தினங்களில் உங்கள் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் பயன்படுத்தி தேய்ந்து போய், வெளியே தூக்கிப் போடும் நிலையில் இருக்கும் துடைப்பம் கூட கட்டாயம் வேறொருவர் கைக்கு செல்லக்கூடாது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்கலை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனின் அருளால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News