வீட்டிற்கு தரித்திர யோகத்தை கொண்டு வரும் ‘சில’ ஆபத்தான விஷயங்கள்!

வீட்டின் பிரதான வாசலில் இருந்து தான் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2022, 08:33 PM IST
  • உடைந்த கண்ணாடி பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம்.
  • குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தையும் செல்வ வளத்தையும் பாதிக்கும்.
  • வீட்டின் பிரதான கதவை திறக்கும் போது சத்தம் வரக்கூடாது.
வீட்டிற்கு தரித்திர யோகத்தை கொண்டு வரும் ‘சில’ ஆபத்தான விஷயங்கள்! title=

வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலின் வாஸ்து பற்றி தெரிந்து கொள்வது நல்லது. இவற்றை பின்பற்றுவது வீட்டின் எதிர்மறை சக்தியை அழித்து, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் பிரதான கதவு தொடர்பான சில விஷயங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசலில் இருந்து தான் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

வீட்டின் முன் கோயில், தூண், கட்டிடம் எதுவும் இருக்கக்கூடாது. இவற்றில் ஏதேனும் ஒன்றின் நிழல் பிரதான கதவு மீது விழுந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. வீட்டில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் மஞ்சளால் ஸ்வஸ்திகா அல்லது ஓம் சின்னத்தை வரையவும்.

வீட்டின் பிரதான கதவு வீட்டின் உட்புறத்தில் திறக்கப்பட வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல் ஓட்டம் வீட்டிற்குள் நுழைந்து,  நிதி நெருக்கடியை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

உடைந்த கண்ணாடி பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம். இவ்வாறு செய்தால் அது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தையும் பணம் வரவையும் செல்வ வளத்தையும் பாதிக்கும். மேலும் பணம் அதிகம் செலவாகும்.

மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன!

வாஸ்து படி வீட்டின் பிரதான கதவை திறக்கும் போது சத்தம் வரக்கூடாது. அதேபோல், கதவு தரையைத் தொடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கிறது. கதவை திறக்கும் போது சத்தம் வரக் கூடாது. அத்தகைய சூழ்நிலையில், கதவை எண்ணெய் கொண்டு சரிசெய்ய வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News