Lucky zodiacs of Saturn Retrograde Transit: சனி தேவன், இந்த ஆண்டு பெயர்ச்சி ஆக போவதில்லை என்றாலும், அவரது நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றம் கூட, ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அஸ்தம நிலையில் உள்ள சனி பகவான், மார்ச் மாதத்தில் உதயம் ஆவார். அதன் பிறகு ஜூன் 29ஆம் தேதி வக்கிர நிலையில் இருப்பார். நவம்பர் மாதம் வரை வக்கிர நிலையில் நீடிக்கும் சனி, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுப்பார். இதனால் அவர்கள், பண பலன், சிறந்த ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என அனைத்தையும் பெறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வக்ர நிலையில் பெயர்ச்சி ஆக இருக்கும் சனி பகவானால் ஐஸ்வர்யத்தை அள்ள போகும் சில ராசிகள்


மேஷ ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்  (Aries Zodiac Sign)


மேஷ ராசிக்கு சனிபகவானின் அருளால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள், இப்போது முழு வடிவம் பெற்று, வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். இதனால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். தெய்வ பக்தி நிறைந்திருக்கும். சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.  கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். ஆடம்பரத்திற்காக செலவு செய்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம்.


ரிஷப ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்  (Taurus Zodiac Sign)


ரிஷப ராசியினருக்கு சனி என் வக்கிர பயிற்சி, வேலைகளில், தொழிலில் வெற்றியைத் தேடித் தரும். எதிர்பாராத உதவியினால், வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவு அளிப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.  நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 


துலாம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்  (Libra Zodiac Sign)


துலாம் ராசியினருக்கு கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி தான். தடைபட்டு வந்த வேலைகள் நிறைவடையும். வாய்ப்புகளை அள்ளித் தருவார் சனி பகவான். அதனை பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லலாம். இதுவரை தடம் மாறி இருந்த உங்களது வாழ்க்கை, சீராக தொடங்கும். இதனால் வாழ்க்கையில் நிம்மதி நீடிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ