பார்த்தவுடனே காதல் வசப்படும் இந்த ராசி உங்களுடயதா? அப்ப இந்த விஷயம் தெரியுமா?
Love Zodiac: காதலுக்கு மரியாதை கொடுப்பவரா நீங்கள்? உங்கள் துணையை பார்த்ததும் காதல் உணர்வு வந்ததா? அப்ப நீங்க இந்த ராசிக்காரர் தான்
புதுடெல்லி: ஒருவரின் ஜாதகத்தில் அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அவர்களின் பிறப்பு முதல் இறுதிக் காலம் வரையிலான வாழ்க்கை மாற்றங்கள், கல்வி, திருமணம், சுப நிகழ்வுகள், சோக நிகழ்வுகள், ஏற்றத்தாழ்வு, வேலை வாய்ப்பு, குணாதிசயங்கள், ஆரோக்கியம் என அனைத்தையும் சொல்லும் ஜாதகம், ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களின் அடிப்படை குணாதிசயங்களையும் கணித்துச் சொல்கிறது. அதன்படி, 5 ராசிக்காரர்கள் மிகவும் காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம்! பார்த்தவுடனே காதல் வசப்படும் 5 ராசிகள் எவை என்பது தெரியுமா?
12 ராசிகளில், இந்த ஐந்து ராசிகளும் மிகவும் காதல் உணர்வு கொண்டவை. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிகம் என இந்த ஐந்து ராசிகளின் காதல் ராசிபலனை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா?
அன்பு என்பது அவசியம். மிக முக்கியமாக, ஒரு நல்ல உறவைப் பேணுவதற்கு, அன்பு இருக்க வேண்டும். காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அந்த உறவில் காதல் இருக்க வேண்டும். காதலுக்கு சொந்தக்கார ராசிகளின் பலன்கள்...
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் தாக்கம் இருக்கும். இதனால் அவர்களுக்கு தைரியமும் வலிமையும் அதிகம். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் கில்லாடிகள். இந்த ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் அன்பை விட, இவர்கள் பல மடங்கு அன்பைக் கொடுப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பிறருடன் அன்பான உறவை பராமரிப்பார்கள். தங்கள் வாழ்க்கைத்துணையை பார்த்தவுடனே காதல் வயப்படுவார்கள்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள். தங்கள் இணையை அல்லது துணையை மிகவும் நேசிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள், தங்கள் துணையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொள்வார்கள். அவர்களின் வார்த்தைகளில் காதல் உணர்வு இருக்கும்.
மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்!
கடகம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் உறவை விரைவில் வலுப்படுத்த முயற்சிப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு, புதிய காதல் யோசனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். தங்கள் துணையுடன் ஊர்சுற்ற விரும்புவார்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையைப் பற்றி மிகவும் பொசசிவ்வாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் காதலில் விழுந்தால், அதைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள். தங்கள் அன்பான துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வதற்கு இவர்களுக்கு இணை வேறு யாரும் இல்லை.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் நடத்தையே அவர்களின் துணையை அதிகமாக நேசிக்க வைக்கிறது. காதலிக்கும் மற்றும் பிறரை காதலிக்க வைக்கும் அற்புதமான கலை அவர்களிடம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், கவனம் தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ