Most Vengeful Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவம் இருக்கின்றது. மனிதர்கள் தங்கள் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் சில சிறப்பம்சம் வாய்ந்த குணங்களை பெறுகிறார்கள். மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்ளும் அன்பு பாசம் காதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதர்களின் பண்புகளில் அவர்களது ராசிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களில் பல வகைகள் உண்டு. சிலர் அமைதியானவர்களாக இருப்பார்கள், சிலருக்கு அதிக கோபம் வரும், சிலர் அன்பு காட்டுவதிலும் பாரபட்சம் காட்டுவார்கள், சிலர் தனக்குள் இருப்பதை தனக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள், சிலர் நினைப்பதை யாராலும் கணிக்க முடியாது, சிலருக்கு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும், சிலர் பழிவாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். 


மனிதர்களாகிய நமக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் வருவதுண்டு. ஆனால் அவற்றை அப்படியே மனதில் வைத்துக் கொள்ளாமல் மன்னித்து சண்டைகளையும் மனஸ்தாபங்களையும் மறந்து விடுவது நல்லது. இருப்பினும் அனைவரும் அப்படி இருப்பதில்லை. ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் மன்னிக்க தயாராக இருப்பதில்லை. இவர்களது அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. அதற்கு இவர்கள் முக்கியத்துவமும் அளிப்பதில்லை.


ஒருவர் தமக்கு தீங்கிழைத்து விட்டால் அவர்களை மன்னிப்பதும் மறப்பதும் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமாக ஒரு பணியாக இருக்கின்றது. மன்னிக்காதது மட்டுமில்லாமல் தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை பழிவாங்கும் எண்ணத்திலும் இவர்களில் பலர் இருப்பார்கள். தங்கள் கோபத்திற்காகவும், நெகிழ்வுத்தன்மை இல்லாத பண்புக்காகவும், சண்டை சச்சரவுகளை மன்னிக்காமல் அப்படியே மனதில் வைத்துக் கொள்ளும் குணத்திற்காகவும் மிகவும் பிரபலமாக இருக்கும் சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். உங்கள் நட்பு வட்டத்திலும் அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் (Zodiac Signs) இருந்தால் அவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.


மேஷம் (Aries)


ஜோதிட சாஸ்திரத்தின் படி மேஷ ராசிக்காரர்கள் கோவ குணம் கொண்டவர்கள். அவர்களது தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் படி ஏதாவது நடந்தால் அவர்கள் அதை மறப்பதும் இல்லை மன்னிப்பதும் இல்லை. அதற்காக பழிவாங்க துடிக்கிறார்கள். மற்றவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதும் அன்புடன் பழகுவதும் அன்பாக பேசுவதும் இவர்களுக்கு தெரியும். ஆனால் இவர்களை யாராவது ஏமாற்றினால் அவர்களை மேஷ ராசிக்காரர்கள் மன்னிப்பதில்லை. பொய் பேசுபவர்களை இவர்களுக்கு பிடிக்காது. 


மேலும் படிக்க | பிரேதசாப தோஷம் என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு ஏற்படும்? விமோசனங்களும் பரிகாரங்களும்!


சிம்மம் (Leo)


ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் முன்னோடியாக இருப்பவர்கள். இவர்கள் ஒருவர் மீது அன்பு கொண்டால் அந்த நபருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகிறார்கள். ஆனால் இவர்களை யாராவது ஏமாற்றி விட்டால் அவர்களை இவர்கள் எப்பொழுதும் மன்னிப்பதில்லை. சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மன்னிப்புக்கு இடமே கிடையாது. நம்பிக்கையை யாராவது கெடுத்துவிட்டால், இவர்களால் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு இவர்கள் பழிவாங்காமல் இருக்க மாட்டார்கள்.


கும்பம் (Aquarius)


கும்ப ராசிக்காரர்கள் பழிவாங்குவதில் டாப் ராசிக்காரர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் அத்தனை சுலபமாக யாரையும் மன்னிப்பதில்லை. யாராவது கும்பராசிக்காரர்களை ஏமாற்றி விட்டால், இவர்கள் அத்தனை சுபலத்தில் அவர்களை மன்னிப்பது இல்லை. எப்பொழுதும் அந்த நிகழ்வை நினைவில் கொண்டிருக்கும் இவர்கள் தக்க சமயத்தில் அதற்காக பழி வாங்கவும் செய்கிறார்கள். இவர்கள் ஒருவர் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறார்களோ அதே அளவு பகைமை உணர்ச்சியும் காட்ட முடியும். ஆகையால் கும்ப ராசிக்காரர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் தகர்க்காமல் இருப்பது நல்லது.


மேலும் படிக்க | ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ