‘இந்த’ ராசிகளுக்கு வரும் வாரம் அதிர்ஷ்டம் கொட்டும்! யார் யாருக்கு தெரியுமா?
அவரவர்களின் கிரகப்பல்களின் படி, வாரா வாரம் சில ராசிகளுக்கான பலனும் மாறும்.
தொழில் முதல் காதல் வரை, நிதி மற்றும் ஆரோக்கியம் வரை, இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம் வாங்க.
மேஷம்:
இந்த வாரம், மேஷம், ராசிக்காரர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பீர்கள். இந்த வாரம் நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்புள்ளது. இந்த வாரம் குழு நடவடிக்கைகளில் பங்கேற்பதிலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஆனால், உங்கள் நட்பில் சில சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். காதல் வாழ்க்கையில் இந்த வாரம் முன்னேற்றம் ஏற்படலாம்.
ரிஷபம்:
இந்த வாரம், ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் பகைமையை வளர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் வேலை காரணமாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை புறக்கணிக்க கூடாது. இந்த வாரம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம்.
மிதுனம்:
இந்த வாரம், மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் உணர்வுகள் மற்றும் உறவுகள் பற்றி அதிகமாக புரிந்து கொள்வர். சமீபகாலமாக தோன்றும் கவலைகள் அகலும். நீங்கள் முன்பை விட ஆன்மீகம் அல்லது மன ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். இந்த வாரம் நீங்கள் அதிக ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் உணரலாம். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்?
கடகம்:
இந்த வாரம், கடக ராசிக்காரர்கள் உறுதியுடன் உணருவீர்கள். இவர்கள் முன்பு கண்டுபிடிக்கப்படாத ஆர்வங்களைக் கண்டு பிடிப்பீர்கள். உங்களுக்கான புதிய நோக்கங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் சொந்தத் தேவைகள் மற்றும் ஆசைகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள். கூடுதலாக, புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் உங்கள் திறமைகளை மேம்படுத்தவும் நீங்கள் ஊக்குவிக்கப்பட வாய்ப்புண்டு. இந்த வாரம் கொஞ்சம் செலவாகலாம். ஆனால் எதிர்பாராத வகையில் பண வரவுகளும் வந்து சேரும்.
சிம்மம்:
இந்த வாரம், சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. நீங்கள் உங்கள் நண்பரின் திருமண விழாக்களில் கலந்துகொள்ளலாம். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் முன்பு கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதித்திருப்பீர்கள். இந்த வாரம் நீங்கள் கொஞ்சம் உங்கள் மனநிலையையும் உடல் நலனையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கன்னி:
இந்த வாரம், கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய திட்டங்களுக்கான யோசனைகள் உருவாகலாம். . உங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்கள் உள்ளவர்களிடம் வெளிப்படையாகப் பேசலாம். இந்த வாரம் உங்கள் பெற்றோருடன் சில சண்டைகள் ஏற்பட நேரிடும். நீங்கள் பழைய நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் போது, குழந்தைப் பருவ நினைவுகள் குறித்து பேசுவீர்கள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
துலாம்:
இந்த வாரம், துலாம் ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை உங்களுக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்வீர்கள். காதல்-திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பீரிட்டு அடிக்கும். உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
விருச்சிகம்:
இந்த வாரம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் சிறப்புத் திறமைகளை உங்கள் வேலையில் காட்டுவீர்கள். மேலும் தனித்துவத்தை அதிகமாக வெளிப்படுத்த வாய்ப்புண்டு. உங்கள் மதிப்பை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வாரம் உங்களது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் அன்பு மழையில் நனைவீர்கள். நெகடிவாக யோசிப்பதை மட்டும் தவிர்க்கவும்.
தனுசு:
இந்த வாரம், தனுசு ராசிக்காரர்களுக்கு விடாமுயற்சி மேலோங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களுடன் நல்ல நட்பு ஏற்படும். அவர்களிடம் நல்ல ஆலோசனைகளை பெறுவீர்கள். பகைமையுடன் இருந்தவர்கள் தாமாக முன் வந்து பேசுவர். உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிகமான நேரம் செலவிடுவீர்கள். இரவில் சரியான தூக்கத்தை நடைமுறை படுத்தவு. இல்லையென்றால் இதனால் ஏதேனும் உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்.
மகரம்:
இந்த வாரம், மகர ராசிக்காரர்கள் உறவுகளைப் பற்றிய முக்கியமான உரையாடல்களை மேற்கொள்வார்கள். மாற்றுக்கருத்து ஏற்பட்ட நபர்களுடன் நல்ல உறவுகள் உருவாகும். நீங்கள் ஒரு பெரிய முதலீட்டில் அதிக பணத்தை செலவிடலாம் அல்லது உங்கள் சம்பளத்தில் பெரும் பகுதியை சேமிப்பிற்காக ஒதுக்கலாம். உங்கள் கனவுகளை நோக்கி ஓடுவதற்கான பாதை உங்கள் கண்ணிற்கு தெரியும். உங்கள் அன்புக்குரியவருடன் இனக்கமான உறவு உருவாகும்.
கும்பம்:
இந்த வாரம், கும்ப ராசிக்காரர்கள் தங்களது உறவு பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சி செய்வர். மற்றவர்களுடனான உங்கள் பேச்சுகளில் நீங்கள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதில் கவனம் செலுத்தவும். உங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பது மிகவும் நல்லது. தொழில் ரீதியாக சில ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.
மீனம்:
இந்த வாரம், கலைத்துறையில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர பெரிய வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை கோபப்படுத்துவர். அதனை இன்முகத்துடன் கடந்து செல்வது சிறந்தது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வாரம், உங்கள் வாழ்க்கையின் நிலை உயர ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? ஆன்மிகம் கூறும் பதில் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ