திருப்பதி: திவ்ய தரிசன டிக்கெட் மீண்டும் எப்போது வழங்கப்படும்? தேவஸ்தானம் தகவல்
திருப்பதியில் மீண்டும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் எப்போது வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அனைத்து வகையான டிக்கெட்டுகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இனி திருமலை செல்லும் பக்தர்கள் ஆதார் இல்லாமல் ஏழுமலையானை தரிசக்க முடியாது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் இருக்கிறது. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ள முடியும். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சில புதிய நடைமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது. திருப்பதி செல்லும் பக்தர்கள் இனி ஆதார் இல்லாமல் சென்றால் ஏழுமலையானை தரிசக்க இயலாது. நடைபாதையில் வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வாங்க இனி ஆதார் அட்டையை மட்டுமே பயன்படுத்த வணேடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கும்பத்தில் உதயமாகும் சனி! நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!
ஏனென்றால் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை புக் செய்யும் பக்தர்கள், மலை நடைபாதை வழியாக வரும்போது திவ்ய தரிசன டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் ஒருவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் இருமுறை தரிசனம் செய்துவிடுதாக புகார்கள் எழுந்தன. ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி இரண்டு டிக்கெட்டுகளையும் பக்தர்கள் பெற்று வந்ததால், அதனை முறைப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்தது. அதன்படி, சிறப்பு தரிசன டிக்கெட்டாக இருந்தாலும் சரி, திவ்ய தரிசன டிக்கெட்டாக இருந்தாலும் சரி ஒருவர் ஆதார் அட்டையை காண்பித்து மட்டுமே பெற்றுக் கொள்ளும் வகையில் தொழில்நுட்பங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்கான பணிகள் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதுவரை திவ்ய தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தவுடன் மலை நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என ஏதாவது ஒரு வழியில் மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியும். இன்னும் ஓரிரு மாதங்களில் திவ்ய தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதுவரை பக்தர்கள் சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். மலை நடைபாதை டிக்கெட் மட்டும் விநியோகம் செய்யப்படாது.
மேலும் படிக்க | திருப்பதி: ஆதார் இருந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ