உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். 


மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்


அத்துடன் திருப்பதி வந்துள்ள பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 48 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே இறைவனை வழிபட முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது. மேலும் பகத்தார்கள் சிரமமின்றி தரிசிக்க தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 30 அறைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். எனவே, தர்ம தரிசனத்திற்கு 8 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 2 - 3 மணி நேரமும் தேவைப்படுகிறது.காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.


அதேபோல் நேற்று  78 ஆயிரத்து 602 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 42 ஆயிரத்து 423 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சர்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12:00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. தரிசன அனுமதியுள்ள பக்தர்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.


முன்னதாக சில நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வேலூரில் இருந்து திருப்பதிக்கு இலவச பயணம்; பயன்பெறுவது எப்படி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR