இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2024 : இன்று 12 ராசிகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவை
Today Rasipalan, April 6 Rasipalan: இன்றைய ராசிபலன் ஏப்ரல் 6 2024, உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஜோதிட கணிப்பின்படி ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் இருக்கின்றன. அதனால், கிரகங்களின் அமைப்புப்படி இன்றைய நாள் எப்படி இருக்கும் என நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களது செயல்பாடுகளில் இன்னும் சிறப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்றைய ராசிபலன் ஏப்ரல் 6 2024 எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
மேஷம்
உடல்நிலை சரியில்லாதவர்கள் அதனை சரிசெய்ய சரியான வழியை தேர்வு செய்வீர்கள். தொழில் சார்ந்து எடுக்கும் முடிவுகள் நேர்மறையாக அமையாமல் போக வாய்ப்பு இருக்கிறது. திக்கு தெரியாத திசையில் இருந்து ஒரு புதுப்பிரச்சனை வந்து அது ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். குழுவாக பயணம் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சொத்து விற்பது குறித்து யோசிப்பவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும்.
ரிஷபம்
ஆரோக்கிய பிரச்சனை இருக்கும். முக்கியமான ஒன்றை இன்று இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில் ரீதியாக, நீங்கள் நம்பிக்கையுடன் முன்னேற வாய்ப்புள்ளது. குடும்பச் சச்சரவுகளைத் தீரும். பயணம் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இன்று எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். சிலரால் புதிய சொத்து சேரும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கோடீஸ்வரராவதற்கான வாய்ப்புகள் மற்றும் திட்டங்களை நீங்கள் தீட்டுவீர்கள். தொழில்முறையில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. குடும்ப பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும். சொத்து பிரச்சனை சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் தென்படும்.
கடகம்
உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிதிநெருக்கடி உங்களை சூழப்போகிறது. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் குவியும். குடும்ப உறுப்பினரின் வெற்றி உங்களைப் பெருமைபடுத்தும். சொத்து சார்ந்த எல்லா விஷயங்களும் நன்மையில் முடியும். கல்வித்துறையில் உங்கள் நற்பெயர் வளரும்.
சிம்மம்
ஆரோக்கிய பிரச்சனைக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு நல்ல முடிவுகள் இருக்கும். கடனை திருப்பி செலுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். மனைவி, நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி கிடைக்கலாம்.
கன்னி
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிலருக்கு நிதி நிலைமை கவலையை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியை கொடுக்கும். சொத்து தகராறு முடிவுக்கு வரும்.
துலாம்
நல்ல ஆரோக்கியம் வேண்டும் என்றால் குப்பை உணவுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிதி நிலைமைக்கு கவனம் தேவைப்படலாம். எனவே சிக்கனமாக செலவு செய்யுங்கள். தொழில் ரீதியாக நீங்கள் திட்டமிட்டதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கனிந்துள்ளது. அயல்நாட்டு பயணங்களுக்கான நேரம் இப்போது கூடி வந்துள்ளது.
விருச்சிகம்
நல்ல உணவுப் பழக்கம் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். நிதி பிரச்சனை குறித்து சரியான நேரத்தில் எடுக்கும் முடிவு, உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விரைவில் நீங்கி வீட்டில் அமைதி நிலவும். ஒன்றாகப் பயணம் செய்வது ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவும்.
தனுசு
உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு உகந்த நாளாக இது இருக்காது. வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான பயணமாக இருக்கும். புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் உள்ளது. தொழில் தொடக்கம் மற்றும் சமூக பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மகரம்
சிக்கனமாக இருப்பீர்கள். அது உங்களுக்கு எப்போதும் போல் கைகொடுக்கும். பணப்பிரச்சனைக்கான வாய்ப்பு இருப்பதால் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் சார்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் உள்ளது.
கும்பம்
தினமும் செய்வதையே இன்றும் செய்யுங்கள், அதுவே உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். முதலீட்டில் லாபம் உண்டு. தொழில்முறை சார்ந்து எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். வீடு கட்டுவதற்கான திட்டங்கள் விரைவில் நிறைவேறும்.
மீனம்
கடுமையான உணவுக்கட்டுப்பாடு அவசியம். சரியான திட்டமிடல் மூலம் வீண் செலவுகளைத் தடுக்க முடியும். கவனச்சிதறல்கள் காரணமாக வேலையின் வேகம் குறையலாம். சொத்து சம்பந்தமாக நல்ல செய்திகள் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ