மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்... அனைத்திலும் வெற்றி

Sukran Peyarchi Palangal: சுக்கிரன்பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். சுக்கிரன் இவர்கள் மீது அதீத கருணையை காட்டப்போகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2024, 11:29 AM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு கட்டிடம், நிலம், வாகனம் மூலம் லாபம் கூடும்.
  • மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
  • சொந்த வாகனம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்... அனைத்திலும் வெற்றி title=

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர நிவர்த்தி, வக்ர பெயர்ச்சி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் அனைவரது வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 

கலை, அழகு, பெருமை, பணம், குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். சுக்கிரன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் வலுவாக இருந்தால், அவர் குறுகிய காலத்தில் உயர் பதவிகளை அடைவார். மேலும், அவரது வாழ்வில் செல்வத்திற்கு பஞ்சமிருக்காது. அவர் தனிப்பட்ட வாழ்விலும் மகிழ்ச்சியும் ஆமைதியும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைப் பெறுகிறார்கள். மொத்தத்தில் சுக்கிரன் அருள் பெற்றவர்கள் ராஜவாழ்க்கை வாழ்கிறார்கள். 

மகிழ்ச்சிக்கான காரணி கிரகமான சுக்கிரன் மார்ச் 31-ம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் ஏப்ரல் 24-ம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். சுக்கிரன் இவர்கள் மீது அதீத கருணையை காட்டப்போகிறார். சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக ஏப்ரல் மாதம் இவர்களுக்கு அமோகமாக இருக்கும். சுக்கிரன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை (Zodiac Signs)பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் நற்பலன்களை பெறவுள்ள ராசிகள்

ரிஷபம் (Taurus): 

சுக்கிரன் அருளால் இந்த நேரத்தில் உங்களது பல விருப்பங்கள் நிறைவேற்றும். நீங்கள் இப்போது அதிக பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் அழகும் கவர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்வில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர்களுடன் உறவு சுமுகமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம் (Cancer): 

கடக ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக கடினமாக பணிகளும் எளிதாக நடந்து முடியும். உங்களது அறிவுத்திறன் அதிகரிக்கும். பேச்சாற்றல் மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். ஆன்மீக தலங்களுக்குச் செல்வது நன்மை தரும்.

மேலும் படிக்க | நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான், உங்க ராசி என்ன?

விருச்சிகம் (Scorpio): 

சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். 

தனுசு (Sagittarius): 

தனுசு ராசிக்காரர்களுக்கு கட்டிடம், நிலம், வாகனம் மூலம் லாபம் கூடும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சொந்த வாகனம், வீடு வாங்கும் கனவு நிறைவேறும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

மீனம் (Pisces): 

சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு உயர் பதவி, பணம், கௌரவம் கிடைக்க முழு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை முன்னேற்றம் காணும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அரச கோடீஸ்வர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News