அரசனும் நீதிக் கடவுளுமான சனி கிரகம் ஞாயிற்றுக்கிழமை முதல் வக்ர நிலையில் நகரத் தொடங்கியது. பொதுவாக ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி 141 நாட்களுக்கு வக்ர நிலையில் இருக்கும். இதற்குப் பிறகு அக்டோபர் 23 ஆம் தேதி வரை சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். சனியின் இந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தால், நாட்டிலும் உலகிலும் பல மாற்றங்கள் ஏற்படும். இத்துடன் வானிலையில் மாற்றம் ஏற்படும் காலம் தொடங்கும். கோடையின் நடுப்பகுதியில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த வருடத்தில் சனி பகவான் இரண்டு முறை ராசி மாறுகிறார். ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் ராசி மாறினார். மீண்டும், ஜூலை 12 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 29ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்த சனி பகவான், தற்போது மீண்டும் ஜூலை 12ம் தேதி மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார். இதன் காரணமாக மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு சனி தசை நடக்கும். அதேபோல் கடகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசையிடமிருந்து விடுதலையும், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த ஆண்டு சனியும் வியாழனும் ஜூலையில் பிற்போக்கு இயக்கத்தில் நகரும்.


மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்


இந்த 141 நாட்களில் சனி வக்ர நிலையில் இருப்பதால் 12 ராசிகளையும் பாதிக்கும். அந்த வகையில் சனியின் வக்ர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களை சிக்கலில் தள்ளும். எந்த ராசியை உயரத்துக்கு உயர்த்தி எடுத்துச்செல்லும் மேலும் இந்த நேரத்தில், எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம். 


மேஷம்: எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தவறான செயல்களைத் தவிர்க்கவும்
ரிஷபம்: எந்த முடிவை எடுத்தாலும் புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள்
மிதுனம்: எந்தப் பொறுப்பு கிடைத்தாலும் நிறைவேற்றுங்கள்
கடகம்: ஒவ்வொரு வேலையிலும் எச்சரிக்கை அவசியம்
சிம்மம்: பொறுப்புகள் அதிகரிக்கும், பேராசை விலகும்
கன்னி: பதவி உயர்வு, பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு
துலாம்: பணியில் தடை, நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்படுவீர்கள்
விருச்சிகம்: பணம் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்
தனுசு: நோய், வலியால் குடும்ப பிரச்சனைகள் ஏற்படும். இதனால் ஜாக்கிரதையாக இருங்கள் 
மகரம்: கோபம், அகங்காரம் விலகி இருப்பதன் பலன்கள்
கும்பம்: திடீர் செலவுகள் அதிகரிக்கும், புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள்
மீனம்: ஆரோக்கியம் முக்கியம், நிதானத்தை கடைபிடியுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR