ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒருவர் பிறந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே ஒருவருடைய ஜென்ம ராசியாகும். மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு 1,2,3,4 என குறிப்பிடப்படுகின்றன.ராசிகள் 12 என்றாலும் 27 நட்சத்திரத்தில் எதில் பிறந்தவர் என்பதைப் பொறுத்தே ஒருவரின் ராசி நிர்ணயமாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபிஜித் நட்சத்திரம் என்பது நட்சத்திர மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் பட்டியலில் வராதது. ஆனால் 28வது நட்சத்திரமாக கருதப்படும் இது சக்திவாய்ந்த நட்சத்திரம் ஆகும். இது நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தருவதாக நம்பப்படுவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியானவர்களாகவும், எதையும் சமாளிக்கும் உத்வேகமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடம் கூறுகிறது. 


அபிஜித் என்பது உத்திராட நட்சத்திரத்திற்கும், திருவோண நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ளது என்று கருதப்படுகிறது. "அபிஜித்" என்ற வார்த்தையின் அர்த்தம் "வெற்றி" அல்லது "தோற்கடிக்க முடியாதது". புதன் கிரகத்திற்கு உரியதாக கருதப்படும் அபிஜித் நட்சத்திரம் மகர ராசிக்கு உரியது.


புத்திசாலித்தனம் மற்றும் மன பக்குவம் கொண்டவர்களுக்கும் அபிஜித் நட்சத்திரத்துக்கும் தொடர்பு இருக்கும். அபிஜித் நட்சத்திர ராசியான மகரத்தில் சந்திரனின் நிலை 6:40 டிகிரி முதல் 10:53 டிகிரி வரை இருக்கும் போது பிறந்தவர்கள் அபிஜித் நட்சத்திரத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.


உத்திராட நட்சத்திரத்திற்கும், திருவோண நட்சத்திரத்திற்கும் இடையில் இருப்பதால் அபிஜித் நட்சத்திரத்தின் பண்புகள் இந்த இரண்டு நட்சத்திரங்களிலிருந்தும் பெறப்பட்டவை. பஞ்சாங்கத்தின்படி, அபிஜித் முகூர்த்தம் என்பது மிகவும் மங்கலமானதாக கருதப்படுகிறது. புத்திசாலிகள், பிறருக்கு உதவி செய்பவர்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். 


மேலும் படிக்க | புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உதயமாகும்... மகிழ்ச்சியும், செல்வமும் அதிகமாகும்


கிரகங்கள் ஒரு நட்சத்திரத்திலிருந்து மற்றொன்றுக்கு நகர்கின்றன, இதனால் பூமியில் தனிநபர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.அதேபோல அபிஜித் நட்சத்திரத்தில் வெவ்வேறு கிரகங்கள் அமர்ந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.


அபிஜித் நட்சத்திரத்தில் சுக்கிரன் வந்தால், ​ திருமணத்தில் தாமதம் ஏற்படும், திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத் தான் இருக்கும். அதேபோல, அபிஜித் நட்சத்திரத்தில் குரு இருந்தால் வாழ்க்கையில் வெற்றிகள் வந்து குவியும். பணக்காரர்களாக இருப்பார்கள்.


அதேபோல, அபிஜித் நட்சத்திரத்தில் ராகு இருந்தால், அவர்கள் தங்கள் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ராகு ஒருவரை மிகவும் நல்லவராகவோ அல்லது மிகவும் கெட்டவராகவோ மாற்றலாம். அபிஜித் நட்சத்திரத்தில் கேது இருந்தால், ஒருவருக்கு  தலைமைத்துவத்தையும் கல்வி நிபுணத்துவத்தையும் தருகிறது. நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால்,  அரசியலில் ஆர்வம் அதிகமாகும். வெற்றிகரமான அரசியல்வாதியாக மாறலாம்.


அபிஜித் நட்சத்திரத்தில் சூரியன் வந்தால், ஒருவரின் அதிகாரம் பதவி, பிரபல்யம் என ஒருவரின் ஆளுமையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். அபிஜித் நட்சத்திரத்தில் சந்திரன் வந்தால், புத்தி, அறிவு மற்றும் ஞானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  
அபிஜித் நட்சத்திரத்தில் புதன் வந்தால், வாழ்க்கையில் தொட்டதெல்லாம் துலங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும். அபிஜித் நட்சத்திரத்தில் சனி வந்தால், வாழ்க்கையில் பல மோசமான மற்றும் எதிர்மறையான விளைவுகள் நடைபெறும்.  


மேலும் படிக்க | ஜூன் மாத கடைசி வாரத்திற்கான ராசிபலன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ