புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உதயமாகும்... மகிழ்ச்சியும், செல்வமும் அதிகமாகும்

Budhan Peyarchi Palangal: புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2024, 07:30 PM IST
  • புதன் உதயத்தால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
  • இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.
  • ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உதயமாகும்... மகிழ்ச்சியும், செல்வமும் அதிகமாகும்

Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் மனிதர்களின் சில குணாதிசயங்களுக்கு காரணமாக அமைகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரம், உதயம், அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.

Add Zee News as a Preferred Source

புத்திக்கூர்மை, வியாபாரம், பேச்சாற்றல் ஆகியவற்றுக்கு அதிபதியாக உள்ள புதன் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். ஜூன் 27 ஆம் தேதி, புதன் மிதுனத்தில் உதயமாகவுள்ளார். அதன் பிறகு ஜூன் 29 ஆம் தேதி, புதன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries):

மேஷ ராசிக்கு புதனின் உதயம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த நேரத்தில் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் அதிகம் சேமிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இவற்றால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

மிதுனம் (Gemini)

புதன் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சரியான அறிவு உள்ளவர்கள் அதிக லாபம் அடைவார்கள். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் அதிகப் பணம் சம்பாதிப்பதுடன் சேமிப்பையும் செய்ய முடியும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும், புரிதலும் அதிகமாகும். 

மேலும் படிக்க | திருவாதிரையில் சுக்கிரன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பொற்காலம் ஆரம்பம்

துலாம் (Libra)

புதன் உதயத்தால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள். புதனின் பெயர்ச்சி நிதி விஷயங்களுக்கு சாதகமாக இருக்கும். பணி இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். 

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதன் அருளால் பண வரவு அதிகமாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News