கேது பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலையை மாற்றுகின்றன. கிரகங்களின் அனைத்து மாற்றங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பலன்கள் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கின்றன. நிழல் கிரகமான கேது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துலா ராசிக்குள் நுழைந்தார். கேது 2023 ஆம் ஆண்டு வரை துலா ராசியில் இருப்பார். கேது கிரகத்தின் இந்த மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிகள் இதன் அதிகப்படியான தாக்கத்தை எதிர்கொண்டு வேதனையான நாட்களை சந்திக்கக்கூடும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேது பெயர்ச்சி 2022: துலா ராசிக்கான பலன்கள்


துலா ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் அதிகமாக பழக விரும்ப மாட்டார்கள். இந்த காலகட்டத்தில் அமானுஷ்ய மர்மங்கள் மற்றும் தந்திரங்களைக் கற்றுக்கொள்வதில் நீங்கள் ஆர்வம் காட்டக்கூடும். தனியாக சிறிது நேரம் செலவழிக்க சில பயண திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்திலும் உங்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. 


இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் காதலர் அல்லது கணவன் / மனைவியுடன் பற்றில்லாத உணர்வைப் பெறுவீர்கள். உங்கள் வணிகத்தில் புதிய கொள்கைகள் மற்றும் யோசனைகளை நீங்கள் அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள், இருப்பினும் வெற்றி விகிதம் மிகவும் குறைவாகவும் மெதுவாகவும் இருக்கும். ஆகையால் இந்த காலகட்டத்தில் புதிதாக எதையும் செய்வது நல்லதல்ல.


மேலும் படிக்க | செப்டம்பர் 12 முதல் இந்த ராசிகளுக்கு பிரச்சனை: அதிகபட்ச கவனம் தேவை 


கேது பெயர்ச்சி 2022: மகர ராசிக்கான பலன்கள்


மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நற்பெயர் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் அதிக திருப்தி கிடைக்காது. எனினும், தொழில் வளரும். 


பணி இடத்தில் மேல் அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் அனுகூலமாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர்கள் உங்கள் நோக்கங்களை சந்தேகிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் வணிக உரிமையாளர்கள் வணிகத்தின் விரிவாக்கத்திற்காக பெரிய தொகையை முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில் புதிய விஷயங்கள் எதுவும் சாதகமான முடிவுகளைத் தராது.


கேது பெயர்ச்சி 2022: மீன ராசிக்கான பலன்கள்


மீன ராசிக்காரர்கள் தங்களை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஏனெனில் தொழில்முறையில் வெற்றி எளிதில் வராது. நெறிமுறையற்ற நிதி ஆதாயங்களுக்குப் பின்னால் ஓடாதீர்கள், ஏனெனில் அவை நீண்ட காலத்திற்கு பெரிய இழப்பைக் கொண்டுவரும். இந்த காலகட்டத்தில் உடலில் சில தோல் நோய்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். 


இந்த காலத்தில் உங்களை பலர் ஏமாற்ற முயற்சி செய்யலாம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சிறிய விஷயங்களுக்கும் உங்கள் மீது கோபப்படுவார்கள். எனினும், நீங்கள் பொறுமையை காப்பது நல்லது. முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.


மேலும் படிக்க | செப்டம்பரின் மிகப்பெரிய ராசி மாற்றம்: சூரியனின் மாற்றத்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ