ஆணின் மரணத்தை சொல்லும் பெண்ணின் ஜாதகங்கள்: வைதவ்ய தோஷம் உள்ள பெண்கள்
Vaidhavya Dosham in Horoscope: வைதவ்ய தோஷம் உள்ள பெண்களின் ஜாதகங்கள் கணிக்கும் கணவரின் ஆயுள்
ஜோதிடம் என்பது பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் போன்றவற்றை கொண்டு கணிக்கப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கும் கிரக நிலை, அது ஆணா பெண்ணா என்பதை பொறுத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது. ஒரு ஆணின் ஜாதகத்தைப் பார்த்து அவருடைய மனைவியைப் பற்றிய துல்லியமான தகவலை வழங்க முடியும் என்பதும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில், அவருடைய கணவரைப் பற்றிய தகவல்களையும் சொல்லலாம். பெண்ணின் ஜாதகத்தின்படி கணவரின் வேலை, குணம், ஆயுள், அன்பு காதால் என பல விஷயங்களை சொல்லிவிடலாம்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் மாறி ராசியில் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கணவர் எப்போதும் வெளிநாடு பயணம் செய்வார் அல்லது வெளிநாட்டில் வசிப்பவராக இருப்பார்.
மேலும் படிக்க | சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சனி இருந்தால் அதுவும் வேறு ஏதேனும் தோஷ கிரகத்தின் பார்வையில் இருந்தால், அத்தகைய பெண்களின் திருமணத்தில் பல தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்படும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சம கிரகமான புதனும், தோஷ கிரகமான சனியும் ஒன்றாக இருந்தால், கணவருக்கு புத்திர பாக்கியம் இருக்காது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தின் எட்டாவது வீட்டில் சனி இருந்தால், அது அவரது கணவருக்கு சாதகமற்றதாக இருக்கும். ஒரு பெண்ணின் ஜாதகத்தின் லக்னத்தில் புதனும் சுக்கிரனும் இருந்தால், அவள் மிகவும் அன்பான கணவனைப் பெறுகிறாள்.
மேலும் படிக்க | அங்காரக யோகம் படுத்தும் பாடு
ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் அசுப கிரகம் இருந்தால், அந்த பெண்ணுக்கு அமையும் கணவன், கொடூரமானவனாகவும், ஏழையாகவும் இருப்பார். அதுவே, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சுப கிரகம் இருந்தால், அவரது கணவர் அழகாகவும், விவேகமுள்ளவராகவும், உயர் கல்வி பெற்றவராகவும் இருப்பார்.
இது தவிர, ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் சனி மற்றும் சூரியன் இருந்தால், கணவர் பிரிந்து சென்று விடுவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் செவ்வாய் இருந்தால், அது வேறு ஏதேனும் தோஷ கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு வைதவ்ய தோஷம், அதாவது கைம்பெண்ணாக மாறும் நிலை ஏற்படும்.
ஜாதகத்தின் எட்டாவது வீட்டில், சத்ரு ராசியில் தோஷ கிரகம் இருந்து, அந்த கிரகத்தின் மகாதசை நடந்து கொண்டிருந்தால், வைதவ்ய தோஷம் உருவாகும்.
மேலும் படிக்க | சிம்மராசியில் சூரியன் மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஒரு அசுப கிரகம் அதன் பலவீனமான ராசியில் அல்லது எதிரி ராசியில் இரண்டாவது, ஏழாவது அல்லது எட்டாவது வீட்டில் இருந்தால், அவரது கணவருக்கு மிருத்யு (மரண) யோகம் உருவாகிறது. பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் சூரியன் இருந்தால், இந்த யோகம் கணவனின் அகால மரணத்தைக் காட்டுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | ஆக்ஸ்ட் மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி அனைத்தும் அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ