Vastu Tips : 2024ஆம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பித்தார் போல் இருந்தது. ஆனால், அதற்குள் டிசம்பர் மாதம் முடிந்து, 2025ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. பொதுவாக புத்தாண்டு தொடங்கியபின் பலர் காலண்டர் வாங்குவது, புது பொருட்கள் வாங்குவது போன்ற விஷயங்கள் நடைபெறும். பலர், காலண்டர் வாங்கி, அதை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை கூட பார்ப்பர். அப்படி, நாம் எந்த திசையில் காலண்டரை மாட்ட வேண்டும் தெரியுமா? சரி, புது காலண்டர்களை வாங்கினால் பழைய காலண்டர்களை என்ன செய்வது? அதிலும் சாமி படங்கள் போட்டிருந்தால் என்ன செய்வது? இது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தாண்டு காலண்டர் ஏன் முக்கியம்?


வருடா வருடம் புதுப்புது விஷயங்கள் நம்மை சுற்றி மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு புத்தாண்டும் மாறிக்கொண்டே இருப்பது, புதுப்புது காலண்டர்கள்தான். இந்த புத்தாண்டு காலண்டர்கள் யாரால் வழங்கப்பட்டாலும் முருகன், லட்சுமி, குபேரர், பெருமாள், கிரிஷ்ணன் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இப்படி நாம் வாங்கி வைக்கும் காலண்டர்களை வாஸ்து சாஸ்திரப்படிதான் மாட்டி வைக்க வேண்டுமாம்.
எந்த திசையில் மாட்ட வேண்டும்? 


புத்தாண்டுக்கு காலண்டர் மாட்டியவுடன், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியபடி மாட்ட வேண்டுமாம். அதிலும் குறிப்பாக அதில் சாமி படம் போடப்பட்டிருந்தால் சாமியின் முகம் வடக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் இருக்க வேண்டுமாம். இதன் காரணமாக வீட்டில் செல்வத்தின் வளர்ச்சி பெருகுவதுடன் தெய்வ அருளும் மேலோங்குமாம். அதே நேரத்தில், கேலண்டர் மாட்டக்கூடாத திசை என்ற ஒன்றும் இருக்கிறதாம். இதனை தெற்கு நோக்கியவாறு மாட்டவே கூடாதாம். அப்படி மாட்டினால், வீட்டில் உள்ளவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை ரீதியான வளர்ச்சிகளும் தடைபடுமாம். 


பலர் செய்யும் இன்னொரு தவறு, ஓரிரண்டு காலண்டரை தாண்டி, பல காலண்டர்களை வீட்டில் மாட்டி வைப்பது. இதனால் நாம் பலமுறை தேதிகளை கிழிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம். இப்படி, ஒரு வாரத்திற்கும் மேற்பட்டு நாம் தேதியை கிழிக்காமல் விட்டால் வீட்டில் எதுவும் முன்னேறாமல் இருக்குமாம். அதே போல, வீட்டில் இருப்பவர்கள் பல வித தடைகளையும் மன அழுத்தங்களையும் கூட சந்திப்பராம். 


பழைய காலண்டரை என்ன செய்வது? 


புது காலண்டரை மாட்டியவுடன், பழைய காலண்டரை என்ன செய்வது என்பதே பலருக்கு தெரியாது. அதே சமயத்தில் இந்த பழைய கேலண்டர்களை வீட்டிலேயேவும் வைத்திருக்க கூடாதாம். அதே சமயத்தில் அந்த காலண்டரில் சாமி படம் இருந்தால் அதனை குப்பையிலும் போடக்கூடாதாம். எனவே, அதில் இருக்கும் சாமி படத்தை மட்டும் தனியாக எடுத்து விட்டு மற்றவற்றை பழைய பேப்பர் கடையில் அல்லது குப்பையில் போடலாம். தேதி கிழிக்கும் கேலண்டராக இருந்தால் அதனை கோயில்களில் வைத்துவிடலாம். திருநீர்,குங்குமங்களை எடுப்பவர்கள் அந்த பேப்பரில் அதனை வைத்து எடுத்துச்செல்ல உதவும்.


பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. 


மேலும் படிக்க | மறந்தும் கூட இந்த 3 பொருட்களை வீட்டில் காலியாக வைக்க வேண்டாம்!


மேலும் படிக்க | Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருக சில டிப்ஸ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ