Vastu Tips: வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருக சில டிப்ஸ்..!!

வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள், ஆனால் சில நேரங்களில் அது இல்லாமல் இருக்கலாம்.  இதற்கு வாஸ்து சாஸ்திரத்தில், தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாஸ்து குறைபாடுகளையும்  நீக்கும் மிகவும் பயனுள்ள சில தீர்வுகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

1 /5

வீடு கட்டும் போதும், வாங்கும் போதும் ஒவ்வொரு அறையிலும் சூரிய ஒளி இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் எந்த எதிர்மறை தாக்கமும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். 

2 /5

படுக்கையைப் பற்றி இரண்டு முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில், படுக்கை உலோகமாக இல்லாமல், மரத்தினால் ஆன கட்டிலில் உறங்குவது மங்களகரமானது. தேக்கு அல்லது ரோஸ்வுட் மரத்தால் கட்டில் அமைத்தால் மிகவும் நல்லது. அதில் மெத்தைகளாக இல்லாமல், ஒரே மெத்தையாக இருப்பதுமேலும் நன்மை பயக்கும்.  

3 /5

சாப்பாட்டு அறை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும். இல்லை என்றால், தென்கிழக்கு திசையில் டைனிங் டேபிளையும் வைக்கலாம். இது குடும்பத்தில் அன்பை நிலைநிறுத்தும்.

4 /5

வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். இது வீட்டில் அமைதியின்மையோடு, மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

5 /5

வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்தால், வீட்டின் வடக்கு திசையில் துளசி செடியை நடவும். மாலையில் அதன் கீழ் விளக்கைப் ஏற்றி வைத்தால், சில நாட்களில் வித்தியாசம் தெரியும். (குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)