New Year Rasipalan: புத்தாண்டு பிறந்துவிட்டது. 2025 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை? எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.
Guru Peyarchi, Sani Peyarchi Palangal: 2025 ஜோதிட ரீதியாக, மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றும். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மற்றும் மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சனி பகவான், குரு பகவான் மற்றும் பிற கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் மேஷம் முதம் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.
மேஷம்: இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களின் லட்சியங்கள் அதிகரிக்கும். நிலம், கட்டிடங்கள், விவசாயம் மற்றும் சொத்துக்களின் பரிவர்த்தனைகள் நடைபெறும். தொழிலதிபர்கள் இந்த ஆண்டு தங்கள் தொழிலை வேகமாக நடத்துவது மிகவும் கடினமாக இருக்கும். அலுவலக பணிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆண்டு பெரும்பாலான நேரங்களில் கலவையான பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டு, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அது பிரச்சனைகள் மற்றும் இழப்புகளுக்கு வழிவகுக்கும். சொத்து வாங்க இது நல்ல நேரம். முதலீடுகள் செய்யும் முன்னர் சற்று யோசித்து, நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று பின்னர் முதலீடு செய்வது நல்லது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிதி நன்மைகள் ஏற்படும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் அருளால் இந்த ஆண்டு செல்வம் மற்றும் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், முறையான சிகிச்சை மூலம் பூரண குணம் அடைவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்க்கு வருமானம் குறைவாக இருக்கும். உங்கள் திட்டங்களைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. உறவினர்களுடன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் பெரும்பாலான செலவுகள் உடல்நலக் காரணங்களால் இருக்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்கள் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளத. இது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். வர்த்தகம் செழிப்பாக மாறக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் அன்பும் இருக்கும்.
துலாம்: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த ஆண்டு துலா ராசிக்காரர்க்ளுக்கு வெற்றிகரமானதாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் நாள்பட்ட நோய்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். சமூக மரியாதை மற்றும் மகிழ்ச்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. ஆனால், முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டம். இல்லையென்றால், பணம் மற்றும் சொத்து இழப்பு ஏற்படலாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய முடியும். பழைய முதலீடுகளால் லாபம் பெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு: சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் பிற கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால், தனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டும் அனைத்து நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனைவியிடமிருந்து நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் வியாபார கூட்டாளிகளுடன் சில சண்டைகள் வரலாம். அனைத்து வித பரிவர்த்தனகளிலும் கவனமாக இருப்பது நல்லது.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு 2025 -இல், இந்த ஆண்டு உறவினர்கள் சிலரால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்படலாம். 2025 அரசு அதிகாரிகளுக்கும் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் நல்ல ஆண்டாக இருக்கும். பண புழக்கம் அதிகமாகும். லாபம் அதிகர்க்கும். ஆனால், கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக 2025 ஒரு நல்ல ஆண்டாக இருக்கும். பங்குச் சந்தையில் அதிக லாபம் பெறலாம். தொழில் துறையில், உங்களில் சிலர் நிதி ஆதாயங்களுடன் முன்னேற்றம் பெறலாம். குறுகிய பயணங்கள், கடிதப் போக்குவரத்து மற்றும் பிற வகையான தொடர்புகள் மூலம் நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறலாம். இந்த ஆண்டு லாபகரமானதாக இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு கிரக பெயர்ச்சிகளின் காரணமாக இந்த ஆண்டும் உத்வேகத்துடன் இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்தை சந்திக்க நேரிடலாம். நீங்கள் அக்கம்பக்கத்தினருடன் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளலாம். உங்கள் திட்டங்கள் தாமதமாகலாம். ஆகையால், அதீத கவனத்துடன் இருப்பது நல்லது. குழந்தைகளால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.