திருமணம் ஆகாத பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது! ஏன் தெரியுமா?
Vastu Tips for Hair Wash: வாஸ்து சாஸ்திரத்தின் படி திருமணம் ஆனா மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் எப்போது தலைக்கு குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Vastu Tips for Hair Wash: வாஸ்து சாஸ்திரத்தின் படி பெண்கள் தலைக்கு குளிப்பது தொடர்பான பல விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கன்னிப் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் அல்லது குளிக்க கூடாது என்று அவற்றில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் உண்டு. பலரும் வாஸ்து விதிகளை தவறாமல் பின்பற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வில் வரும் பிரச்சனைகள் குறையும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பெண்கள் குழந்தை பருவத்திலிருந்தே பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.
மேலும் படிக்க | அள்ளிக் கொடுப்பார் ராகு - கேது! இவர்களுக்கு குரோதி வருடம் அட்டகாசமாய் இருக்கும்
தலைக்கு எந்த நாளில் குளிக்க வேண்டும் வேண்டும், எந்த நாளில் குளிக்க கூடாது என்பதும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமான ஒன்று. இருப்பினும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என இருவருக்கும் இந்த விதிகள் வேறுபட்டவை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, திருமணமான பெண்கள் திங்கட்கிழமை தலைக்கு குளிக்க கூடாது. இதனால் கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேசமயம் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் சனிக்கிழமையன்று தலைக்கு குளிக்க கூடாது. இது தவிர திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது. ஏன் இந்த நாளில் முடியை கழுவக்கூடாது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது!
வாஸ்து சாஸ்திரத்தின்படி, இளைய சகோதரர்களைக் கொண்ட திருமணமாகாத பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் புதன் கிழமை தலைக்கு குளித்தால் அவர்களது சகோதரனுக்கு பிரச்சனைகள் வரலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நாளில், சகோதரன் மூத்த சகோதரன் இல்லாத கன்னிப் பெண்கள் தலைக்கு குளிக்கலாம்.
பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிக்க கூடாது!
இந்து மத நம்பிக்கையின்படி, திருமணமான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிக்க கூடாது. திருமணமான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளித்தால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இருப்பினும் திருமணமாகாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிக்கலாம். இதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
எந்த நாளில் தலைக்கு குளிக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கன்னிப் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவரும் வெள்ளிக்கிழமை தலைக்கு குளிக்கலாம். இந்த நாளில் தலைக்கு குளிப்பதால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது. மேலும் வியாழன் அன்று தலைக்கு குளிக்க கூடாது. மத நம்பிக்கையின்படி, வியாழன் அன்று தலைக்கு குளிப்பது குடும்பத்தில் வறுமையைக் கொண்டு வருகிறது. இது தவிர, எதிர்மறை ஆற்றல் வீட்டில் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ