குரு பெயர்ச்சி 2024: கூடி வரும் கல்யாண யோகம்.. இந்த ராசிகளுக்கு பண வரவு

Jupiter Transit 2024 : குரோதி புத்தாண்டு சித்திரை மாதத்தில் பிறக்கப்போகிறது. இதே சித்திரை மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருவால் சில ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 8, 2024, 11:32 AM IST
  • தொழிலில் முன்னேற்றம் பெறலாம். பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும்.
  • கணவன், மனைவிக்குள் அன்பும் அதிகரிக்கும்.
  • புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்துக்களினால் வருமானம் உண்டு.
குரு பெயர்ச்சி 2024: கூடி வரும் கல்யாண யோகம்.. இந்த ராசிகளுக்கு பண வரவு title=

Guru Peyarchi 2024 - 2025 : ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரங்களின் ராசி மாற்ற மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு கிரகத்தின் பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பதால், வருகிற மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு மேஷ ராசியில் விலகி ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். 

ஜோதிடத்தின் படி, குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும் என்பது நம்பிக்கை. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது மே மாதம் குரு பெயர்ச்சிக்குப் பிறகு சில ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே இவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign): செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கலாம். தற்போது வரை கடன்களால் தத்தளித்து வந்தவர்களுக்கு தீரும் காலம் பிறக்கும். நோய்கள் தீரும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை விழவுள்ளதால், தொழிலில் முன்னேற்றம் பெறலாம். பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். 

மேலும் படிக்க | Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி அன்று என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

ரிஷபம் (Taurus): சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். இதனால் குடும்பத்தில் கவனமாக உரையாட வேண்டும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் அதிகரிக்கும். 

கடகம் (Cancer Zodiac Sign): சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமரப் போகிறார். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கெட்டிமேளச்சத்தம் கொட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வருமானம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கலாம். 

கன்னி (Virgo Zodiac Sign): புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால நன்மை உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். தொழிலில் வெற்றியடைவீர்கள், புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. 

விருச்சிகம்: செவ்வாய் ராசி அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் ஏற்றத்தை தரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் கைகூடி வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். 

மகரம் (Capricorn Zodiac Sign): சனிபகவான் ராசி அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி பெறலாம். திருமணம் நடக்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கலாம். 

மீனம் (Pisces Zodiac Sign): வியாழன் ராசி அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன் கிடைக்கும். வீட்டில் கல்யாண யோகம் உண்டாகும். காதல் மலரும். மே மாதம் முதல் கோடீஸ்வர யோகம் உங்களைத் தேடி வரப்போகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஏழரை சனிக்கு நிவாரணம் அளிக்கும் மகாசிவராத்திரி பூஜை: சிவன், சனி அருள் சேர்ந்து கிட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News