சுக்கிரனின் சஞ்சார மாற்றங்கள்: இன்று நடைபெற்ற சுக்கிரன் பெயர்ச்சி அனைவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு விதமான பலன்களை கொண்டு வரவிருக்கிறது. இன்று (2022 ஆகஸ்ட் 07) காலை 05:12 மணிக்கு பெயர்ச்சியான சுக்கிரன் தற்போது கடக ராசியில் இருந்து ஆட்சி செய்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி, சூரியன் ஏற்கனவே கடகத்தில் இருக்கும் நிலையில், அங்கு சென்றிருக்கும் சுக்கிரனின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். இன்றைய சுக்கிர பெயர்சி கொடுக்கும் நல்ல பலன்களும், தீய பலன்களும் இன்னும் சில நாட்களுக்குத்தான். உண்மையில் ஆகஸ்ட் 31 வரையில் சுக்கிரன் இன்னும் ஒரு முறை பெயர்கிறார். மூன்று முறை நட்சத்திர மண்டலத்தை மாற்றுகிறார். அதாவது, இன்றைய பெயர்ச்சியுடன் சேர்த்து 24 நாட்களில் சுக்கிரனின் ஐந்து பெயர்ச்சி நடக்கப் போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் கிரகம் 24 நாட்களில் ஐந்து முறை எப்படிப் பெயர்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அதாவது இன்றைய பெயர்ச்சியுடன் சேர்த்து இரண்டு ராசிப் பெயர்ச்சிகள் மற்றும் 3 நட்சத்திரங்களில் பெயர்ச்சி செய்கிறார் சுக்கிரன். இந்த ஐந்து பெயர்ச்சிகளும் அனைவரின் வாழ்க்கையை நிச்சயமாக பாதிக்கும்.


மேலும் படிக்க | Mars Transit 2022: 'பெரிய மாற்றம்', 4 ராசிகளுக்கு ராஜ யோகம்


ஜோதிட சாஸ்திரப்படி, கிரகப் பெயர்ச்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த ஐந்து சுக்கிரனின் பெயர்ச்சி எப்போது நிகழப் போகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மொத்தம் இரண்டு ராசி மாற்றங்கள் மற்றும் மூன்று நட்சத்திர மாற்றங்கள்:


முதல் பெயர்ச்சியாக கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி (ஆகஸ்ட் 7, 2022) அதாவது இன்று நடைபெற்றுவிட்டது. சுக்கிரன் நான்காவது ராசியில் அதாவது கடக ராசியில் ஆகஸ்ட் 7, 2022 அன்று காலை 05:12 மணிக்கு பெயர்ச்சியானார்.


சுக்கிரனின் அடுத்த அதாவது இரண்டாம் பெயர்ச்சி: சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: (ஆகஸ்ட் 31, 2022): நீர் ராசியானன கடக ராசியில் இருந்து நெருப்பு ராசியான சிம்ம ராசிக்கு ​​ஆகஸ்ட் 31, 2022 புதன்கிழமை மாலை 04:09 மணிக்கு சுக்கிரன் பெயர்கிறார்.


24 நாட்களில் நடைபெறவிருக்கும் மூன்று நட்சத்திர பெயர்ச்சிகளில், முதல் பெயர்ச்சியாக  பூசம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 09, 2022 இரவு 10:16 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டாம் பெயர்ச்சி, சுக்கிரன் ஆகஸ்ட் 20, 2022 அன்று இரவு 7.02 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சஞ்சாரம் செய்வார். மூன்றாவது பெயர்ச்சியாக, சுக்கிரன் ஆகஸ்ட் 31, 2022 அன்று மதியம் 2:21 மணிக்கு மகம் நட்சத்திரத்தில் பிரவேசிப்பார்.


மேலும் படிக்க | சனீஸ்வரரை இப்படி வணங்கினால் வாழ்க்கை ஜோராக இருக்கும்


சுக்கிரப் பெயர்ச்சிகளின் விளைவு என்னவாக இருக்கும்?  ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன் கிரகம் சுகங்களை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகிறது. இது தவிர, சூரியன் கிரகம் திருமண மகிழ்ச்சி, இன்பம், ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல் போன்றவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறது. இது தவிர, மீனம் சுக்கிரனின் உச்ச ராசியாகும், கன்னி அதன் பலவீனமான ராசியாகும், மேலும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி என்றும் அழைக்கப்படுகிறது.


இந்த இரண்டு பெயர்ச்சிகளில், ஒரு சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசியில் நிகழப் போகிறது, வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிம்மம் சுக்கிரனுக்கு எதிரி போன்றது. எனவே, சுக்கிரன் கிரகத்தின் இந்த நிலை மிகவும் சாதகமாக கருதப்படவில்லை, ஆனால் சில ராசிகளுக்கு சுக்கிரனின் சிம்மப் பெயர்ச்சி நன்மை அளிக்க்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Venus Transit: சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு நல்லது, யாருக்கு ஆபத்து? முழு ராசிபலன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ