சுக்கிரன், நவகிரகங்களில் காமத்திற்கு அதிபதி. காமம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு என்பது தவறான புரிதல் ஆகும். ஆடம்பர வசதிகளை அனுபவித்து வாழ்வது, விரும்பிய சுகபோகங்களை பெறுவது மட்டுமல்ல, ஒருவர் பிரபலமாவதற்கு, அழகான தோற்றத்திற்கு என பல முக்கியமான அம்சங்களுக்குக் காரணம் சுக்கிரன் தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் என்றால் கவர்ச்சி, நவ நாகரிக ஆடம்பரம், வசதியான அமைப்புகளைக் கொடுப்பவர். களையாக பார்க்க மற்றவர்களை கவரும் விதத்தில் இருப்பவர்களை மகா லட்சுமி போன்ற தோற்றத்தில் இருப்பதாக சொல்வார்கள். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி என்பதால், பார்த்ததுமே ஈர்க்கும் தோற்றம் கொண்டவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்களாக இருப்பார்கள். 


பெண்பால் கிரகமான சுக்கிரன் ஜூலை 31, 2024 அன்று மதியம் 14:15 மணிக்கு சிம்ம ராசியில் பெயர்ச்சியாகிறார். ஜூலை 7 ஆம் தேதி தான், சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன் பிறகு இதே மாதத்தில் சிம்ம ராசிக்குள் நுழையவிருக்கிறார். சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் மனதில் மகிழ்ச்சியடையப் போகும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.  


ஜூலை 31, 2024 அன்று சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சாரம் 


சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியம் திடசித்தம், வலுவான செயல்பாடு என பல முக்கியமான விஷயங்களைக் கொடுப்பார். ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் சுக்கிரனின் பெயர்ச்சியின் பலன்கள் வேறுபடும்... ஒரே மாதத்தில் இரண்டாவது முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன் யாருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார், யாருக்கு பூரிப்பை அள்ளி வழங்குவார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  


இந்த கிரக சஞ்சாரத்தின் போது சுக்கிரன் ராகு அல்லதுகேது போன்ற தோஷங்களுடன் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன், குருவுடன் இணைந்திருந்தால், திடீர் அதிர்ஷ்டம், பண வரவு, நல்ல ஆக்கப்பூர்வமான மனநிலை என சாதகமான பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | நாகா சாதுக்கள் செய்யக்கூடாத தவறுகள்! அகோரிகள் தப்பு செய்தால் தண்டனையும் அகோரம்!


சுக்கிரன் சஞ்சாரத்தினால் கொழிக்கப் போகும் ராசிகள்


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் நல்ல நிலைமை இருக்கும். மானதில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செல்லும் திருமண வாழ்வில் காதலுடன் கனிவும் கூடி, மனக் கிளர்ச்சியுடன் இருக்கும் காலம் இது. காதல் உறவில் இருப்பவர்களின் பிணைப்பு ஆழமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாகனம், வீடு வாங்கும் யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.


சிம்மம்


சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் தானாக தேடிவரும். மன உளைச்சலில் இருந்து விடுபட வைக்கும் சுக்கிரன் பெயர்ச்சி இது. ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட்டு சுக்கிரனின் ஆசியைப் பெறுங்கள்.


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் இரண்டாவது சுக்கிரனின் பெயர்ச்சியும் நன்மை தருவதாக அமையும். திடீர் பணவரவால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் வெற்றி, வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டு, குழந்தைகளால் நல்ல செய்திகள் என எதிர்வரும் சுக்கிரன் பெயர்ச்சி துலா ராசியினருக்கு நன்மைகளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஆடி மாத முதல் திங்கட்கிழமை ராசிபலன்... 5 நட்சத்திரங்களுக்கு அருமை! சிவவழிபாடு வளம் தரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ