Weekly Horoscope (Sep 26 - Oct 2): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் கடை வாரத்திற்கான ராசி பலன்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
வார ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் கடை வாரத்திற்கான ராசி பலன்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
மேஷம் - இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானது. இந்த வாரம் பலமான பண ஆதாயமும் உண்டு. ஆனால் செலவுகளும் சிறிது அதிகரிக்கும். எனவே, வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலையை தவிர்க்கவும். நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் வாய்ப்பு உண்டு. காதல் துணையின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் போட்டியாளர்கள் முதலாளியுடனான உங்கள் உறவைக் கெடுக்க முயற்சி செய்யலாம். கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது.
ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், பட்ஜெட் மற்றும் உங்கள் பாக்கெட்டையும் மனதில் கொண்டு திட்டமிடுங்கள். புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். இந்த வாரம் உங்களுக்கான பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரம் திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள். சிலர் தங்கள் நலனுக்காக தவறான கருத்தை கூறி உங்களை குழப்பலாம்
மிதுனம் - கணக்கு விஷயத்தில் இப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு மிக முக்கியமானது. கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். ஏமாற்றுதல் அல்லது மோசடி கூட நடக்கலாம். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி வரலாம். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் காதல் துணையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். ஆடை மற்றும் அலங்காரத்திற்காக பணம் செலவழிக்கப்படலாம்.
கடகம் - இந்த வாரம் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம். மன அழுத்த நிலையைத் தவிர்க்கவும். மது அருந்தும் பழக்கம் இருந்தால், முதலில் அதை நிறுத்துங்கள். உடல் நலத்திற்கு நல்லதல்ல. நாள்பட்ட நோய் காரணமாக பாதிக்கப்படலாம். நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கலாம். இந்த வாரம் நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
சிம்மம் - இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்கள் பேச்சில் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது. பிறர் வாழ்வில் தலையிடாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்லது. புகுந்த வீட்டினருடன் நல்ல உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஈகோ காரணமாக உங்களை மற்றவர்கள் உங்களை தவறாக மதிப்பிடுவார்கள். அதனால், கவனமாக எடந்து கொள்ளுங்கள்
கன்னி - பண ஆதாயம் உண்டாகும். மகாலக்ஷ்மியின் அருள் இந்த வாரம் உங்கள் மீது இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், அதற்கு நேரம் சிறப்பாக உள்ளது. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஷாப்பிங் செல்ல தயாராக இருங்கள்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ