வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை
Weekly Horoscope: ஜூன் 6-ம் தேதி துவங்கும் இந்த வாரத்தில் தனுசு முதல் மீனம் வரையிலான வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
Weekly Horoscope: ஜூன் 6-ம் தேதி துவங்கும் இந்த வாரத்தில் தனுசு முதல் மீனம் வரையிலான வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்குப் பொறுப்புச் சுமை, சோம்பேறித்தனம் போன்ற உணர்வுகள் வேலைகளைச் செய்ய விடாது. சோம்பலை விட்டுவிட்டு திட்டமிட்டு முன்னேறுங்கள். பூர்வீக வியாபாரத்தில் டென்ஷன் வர வாய்ப்பு உண்டு. தந்தையின் பணத்தை தொழிலுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. சின்னச் சின்ன விஷயங்களுக்கு நடுவில் ஈகோவையும் கோபத்தையும் கொண்டு வராதீர்கள், ஈகோ மற்றும் கோபம் விஷயங்களைக் கெடுத்துவிடும்.
குடும்பத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த திருமணம் கை கூடும். பண உதவிக்கு தயாராக இருங்கள். நோய்க்கு சிகிச்சை அளித்த பிறகும், நிவாரணம் இல்லை என்றால், வைத்தியரை மாற்றலாம். சமூக நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்கலாம். ஆனால் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதனால், தேவையில்லாத பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்திலும் வீட்டிலும், தேவையற்ற தவிர்க்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): மேஷம் முதல் கடகம் வரை
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சிரமமான சூழ்நிலை இருந்தாலும், பணியில் மூத்தவர்களுடன் பழகினால் இலக்கில் இருந்து விலகாமல் இருப்பீர்கள். அவர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் இந்த வாரம் முழு லாபம் அடைவதால் வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள்.
இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் உறுதியான சுருக்கமான பேச்சு மக்களை ஈர்க்கும். இந்த வாரம் ஏதேனும் குடும்ப விசேஷம் வந்தால், அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடுங்கள், அவர்களின் மகிழ்ச்சியை கொண்டாட்டமாக மாற்றுங்கள். சுகர் பேஷண்ட் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வழக்கமான மருந்து, டயட் ஆகியவற்றில் கவனம் தேவை. இந்த வாரம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். வாகனம் வாங்குவதால் வீட்டின் வசதிகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் இந்த வாரம் நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிக்க வேண்டும் இல்லையெனில் மேலதிகாரியின் கோபத்தை சந்திக்க வேண்டி வரும். இரும்பு சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கும். போதையில் இருக்கும் நண்பர்களிடம் இருந்து இளைஞர்கள் வில்கி இருக்க வேண்டும் அவர்களின் சகவாசம் சரியில்லை.
வீட்டில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். எரிவாயு அடுப்பு மற்றும் மின்சார சுவிட்சை சரியாக சரிபார்க்கவும். வாகன விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது, எச்சரிக்கையாக இருக்கவும். தோல் தொடர்பான பிரச்சனைகளும் காணப்படும். வாரத்தின் தொடக்கத்தில், செலவின வேலைகள் அதிகமாக இருந்தால், இறுதி வரை முதலீட்டு திட்டமிடல் இருக்கும்.
மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): சிம்மம் முதல் விருச்சிகம் வரை
மீனம்
இந்த ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் துணை நிற்கும், முழு ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களாக மாறுவார்கள். ஆனால் இன்னும் முதலீடு குறித்த சாதக பாதகங்களை ஆராய்ந்து மனதில் கொள்ள வேண்டும், . இளைஞர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சயாக செயல்பட வேண்டாம். மற்றவர்களிடம் பேசும்போது உங்கள் கண்ணியத்தைக் காட்டுங்கள்.
குடும்பத்தில் உள்ளவர்களுடன் சச்சரவுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும், எந்த விதமான மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் அன்புடன் அதை நீக்கவும். உடல்நலம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படும், குறிப்பாக வாரத்தின் நடுப்பகுதியில் எச்சரிக்கை தேவை. நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த அரசுப் பணிகள் இந்த வாரம் எளிதாகும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி; அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR