வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்களாக இருக்கும்.. சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். துலாம், கும்பம், மீனம் உட்பட 6 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் வாராந்திர ராசிபலன்
ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான காலம் 6 ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்தைப் பெறும் இந்த ராசிகளுக்கு வரும் வாரம் பல நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.  


மேஷம்: நிதி விஷயங்களில் நல்ல நேரமாக இருக்கும் இந்த வாரம், வீட்டைப் புதுப்பிக்க பணம் செலவழிக்கலாம். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் வாரம் இது


ரிஷபம்: பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெறும் வாய்ப்புகள் ரிஷப ராசியினருக்கு உண்டு. கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலையும் வரலாம். தெய்வ வழிபாடு நல்லது.


மிதுனம்: வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இது. ஆனால் ஆடம்பரத்திற்காக பணம் செலவழிப்பதை கட்டுப்படுத்தவும். பணமுடை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அநாவசிய செலவுகள் வீடு தேடி வரும். எனவே, நன்கொடை போன்ற அற காரியங்களுக்கு செலவழித்து விடலாம். 


மேலும் படிக்க | ஆடியில் ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் சிவனுக்கு காவடி! கங்கை நீரால் அபிஷேகம்!!


கடகம்: முதலீடு செய்து வைத்திருந்த பணம், தற்போது நல்ல பலனைக் கொடுக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி வாய்ப்பு நிச்சயம். பயணங்கள் மகிழ்ச்சியையும் உல்லாசத்தையும் தரும், ஆனால் அதற்கு அதிகமாக பணம் செலவழிக்க நேரிடும்.


சிம்மம்: வருமானத்தில் சட்டென்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய முயற்சி எதையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.


கன்னி: வங்கித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும் இந்த வாரத்தில், கடனாக கொடுத்த பணத்தை திரும்பப்பெறும் வாய்ப்பு உண்டு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.


துலாம்: தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும், ஆனால் பணம் என்பது செலவழிக்கத்தானே என்ற மனோபாவம் வந்துவிடும்.


விருச்சிகம்: புதிய வாகனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகம். உணவு தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான நேரம். அரசு அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.


 மேலும் படிக்க | ஆடியில் மட்டுமல்ல, எப்போதுமே அகோரிகள் தப்பு செய்தால் தண்டனையும் அகோரம்!


தனுசு:  கடன் அன்பை முறிக்கும் என்ற பழமொழி உங்களுக்கானது தான் தனுசு ராசியினரே. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பண பிரச்சனையில் இருந்து விடுபடும் காலம் இது. பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் காலம் இது.


மகரம்: வியாபாரத்தில் கவனக்குறைவாக இருந்தால் அது நட்டத்தை ஏற்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரில் யாராவது ஒருவரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவிட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.


கும்பம்: பங்குச்சந்தை மூலம் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் என்பதால் பணத்தை கையாளும்போது கவனமாக இருக்கவும். வீண்விரயங்களைத் தடுக்க ரொக்கப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டாம்.


மீனம்: ஆடம்பரத்திற்காக பணம் செலவழிப்பீர்கள். உங்களுக்கே விருப்பம் இல்லாவிட்டாலும், ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். எனவே சுப காரியங்களுக்கு பணத்தை செலவிட்டுவிடுங்கள். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.


மேலும் படிக்க | கங்கையை தலையில் சூடிய கங்காதரருக்கு ஆடி மாத சிறப்பு சிவராத்திரி வழிபாடு! நீரால் செய்யப்பட்ட ஜம்புலிங்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ