இன்று சிவனுக்கு உரிய ஆடி மாத சிவராத்திரி திருநாள். ஆடி மாதத்தில் நீருக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. அதனால் தான், ஆடி மாதம் முழுவதுமே நதிக்கரைகளில் வழிபாடு செய்வது விசேஷமானது. அதிலும் ஆடி மாதத்தில், பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமான திருவானைக்கா அப்புத்தலத்தில் உள்ள சிவனை வழிபடுவது விசேஷம். திருவானைக்காலில் வீற்றிருக்கும் லிங்கம் தண்ணீருக்குள் இருக்கும்.
நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் அந்த இடத்தில் எப்போதும் தண்ணீர் கசிந்துக் கொண்டே இருக்கும். கோடைவெயில் உச்சியைப் பிளந்தாலும், காவேரி ஆறு வறண்டிருக்கும் நேரங்களில் கூட ஜம்புகேஸ்வர லிங்கத்தை சுற்றி இருக்கும் நீர் வற்றுவதில்லை.
நான்கு திசைகளில் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உடைய திருவானைக்கா கோவிலில் உள்ள லிங்கத்தை உருவாக்கியது அம்பிகை தான். ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை, சிவபெருமானை வழிபடுவதற்காக சிவலிங்கம் செய்ய முடிவு செய்தார். காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கமாக பிடித்தார். அம்பிகையின் கைகளால் உருவான நீர்லிங்கத்தை அம்பாள் வழிபட்டார்.
ஜம்பு என்றழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் அடியில் இந்த லிங்கம் இருப்பதால் நீர்தலத்தில் இருக்கும் லிங்கம், ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றது. ஜம்புகேஸ்வரரை உமையம்மையே உருவாக்கி வழிபட்டதால், அதை போற்றும்விதமாக, தினசரி உச்சி கால வழிபாட்டின்போது அர்ச்சகர் சேலை அணிந்து இங்கு வழிபாடு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆடியில் ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் சிவனுக்கு காவடி! கங்கை நீரால் அபிஷேகம்!!
அன்னைக்கு உரிய ஆடி மாதத்தில், அதிலும் நீருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பானது. இந்த சிவராத்திரியைப் போன்றே கடைபிடிக்க வேண்டியது. சிவராத்திரி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஓம் நமசிவய மந்திரத்தை உச்சரிப்பது அவசியம்.
பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக பட்ச சிவராத்திரி, மகாசிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும், சிவனைத் தவிர வேறு தெய்வத்திற்கும் வழிபாடு செய்யலாம். சித்திரை மாத சிவராத்திரியன்று உமாதேவி, வைகாசி மாத சிவராத்திரியன்று சூரியன் வழிபாடு, ஆடி மாத சிவராத்திரியன்று முருக வழிபாடு என ஒவ்வொரு மாதத்திலும் சிவனுடன் மற்றொரு தெய்வத்தையும் சிவராத்திரியில் வழிபடவேண்டும்.
கிரக தோஷங்கள் இருப்பவர்கள், அதிலிருந்து நிவாரணம் பெற சிவபெருமானை சிவராத்திரியன்று வழிபடலாம். சிவராத்திரியில் சிவபெருமானை (Lord Shiva) வணங்கினால் ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சியின் தாக்கத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.
ஆடி மாத சிவராத்திரியான இன்று, சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வது சிவன் அருளைப் பெற்றுத் தரும். சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யும் முன்னர், பால் அபிஷேகம் செய்தால் பல வகையான கிரக தோஷங்களும் நீங்கி நிம்மதியாக வாழலாம். வட இந்தியாவில் ஆடி மாதத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதும் காவடி எடுப்பதும் மிகவும் விசேஷமானது. அதிலும் சாவன் மாத சிவராத்திரி என்று அழைக்கப்படும் ஆடி சிவராத்திரி மிகவும் விசேஷமானது.
கங்கை நதிக்கரைகளில் உள்ள சிவலிங்கங்களுக்கு இன்று அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் நல்ல பலன் கொடுக்கும். நாளை ஆடிப்பெருக்கு, ஞாயிற்றுக்கிழமையன்று ஆடி அமாவாசை என ஆடி மாதத்தின் ஆன்மீக சிறப்புப் பெற்ற நாட்கள் தொடர்ந்து வருகிறது. ஆடியில் அம்மையப்பனை வணங்கினால் சுகவாழ்வு நிச்சயம்.
மேலும் படிக்க | ஆடியில் மட்டுமல்ல, எப்போதுமே அகோரிகள் தப்பு செய்தால் தண்டனையும் அகோரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ