4 ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வாரம் ஓஹோன்னு இருக்கும்! உங்க ராசி என்ன? வாராந்திர ராசிபலன்...
Weekly Rasipalan October 14-20: நவராத்திரி விஜயதசமி என பண்டிகைகள் முடிவடைந்த பிறகு, எதிர்வரும் வாரம் எப்படி இருக்கும்? வரும் வாரத்தின் மாற்றங்கள் யாருக்கு நல்லதாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
Rasipalan For One Week: ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜோதிட கணிப்புகளில், வார ராசிபலன்களும் முக்கியமானவை... வரும் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்துக் கொள்வோம். புரட்டாசி மாதம் முடிந்து, அப்பசி மாதம் துவங்கவிருக்கும் இந்த வாரம் யாருக்கு எப்படி இருக்கும்?
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். செய்யும் காரியங்களில் கவனம் இருந்தால் மேலும் முன்னேறலாம். உங்கள் திறமைகளை பிறர் புரிந்துக் கொள்ளாவிட்டால், அதனை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும், நல்ல செய்திகள் வந்து சேரும். பரபரப்பான நிலைமை இருந்தாலும், நிம்மதியும் அதிகரிக்கும். குடும்பத்தின் மதிப்பு உயரும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும்.
மிதுனம்
தாழ்வு மனப்பான்மையில் இருந்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல காலம் பிறந்துவிட்டது. தேவையில்லாமல் பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுங்கள், தொழில், உத்தியோகத்தில் கவனம் செலுத்தும் காலம் இது.
கடகம்
பிறமொழி பேசுபவர்கள், உங்களுக்கு நெருக்கமாவார்கள். உடன் வேலை செய்பவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வேலையில் அலைச்சல், செலவுகள் குறையும். மனதில் உள்ள குறைகள் நீங்கும் நேரம் இது.
சிம்மம்
தன்னம்பிக்கை இருந்தாலும், அது அதிகமாக இருந்தால் பிரச்சனை தான், வியாபாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் கூட்டாளிகளிடம் இருந்து விலகுவதே நல்லது. கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காரியத்தடை மற்றும் தாமதங்கள் இனி உங்களுக்கு இல்லை. குடும்பம் தொடர்பான கவலைகள் நீங்கும். எதிர்பாராத விஷயங்கள் மனதிற்கு இதமானதாக இருக்கும்.
கன்னி
வாழ்க்கையில் வசந்தகாலம் என்று சொல்லும் அளவுக்கு கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், ஆரோக்கியம் மேம்படுவதுடன், உள்ளத்தில் நேர்மறையான சிந்தனைகள் மேம்படும். கன்னி ராசியினருக்கு இந்த தீபாவளி அட்டகாசமாக இருக்கும்.
துலாம்
தடைபட்ட பணிகள் விரைவில் நடந்தேறும். ஆன்மீக சிந்தனைகளில் மூழ்கிவிடாமல், கொஞ்சம் தொழில் சார்ந்த வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற உத்வேகம் உருவாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விருச்சிகம்
நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். மனதில் கவலைகளும் பொறுப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும், உடன்பிறந்தவர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சுலபமாக முடியும் என்று நினைத்த வேலைகள் இழுத்தடித்தாலும், நல்லபடியாக முடியும் என்பது ஆறுதல். புதிதாக விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
தன்னம்பிக்கை மிக்க மகர ராசியினருக்கு வரும் வாரம் கிடைக்கவிருக்கும் எதிர்பாராத சில வாய்ப்புகள் நல்ல ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். தொழிலுலும், குடும்பத்திலும் நிம்மதி அதிகரிக்கும்.
கும்பம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என்றாலும், அது நிறைவேறும்போது அதன் மீதான ஆசை குறைந்துவிடும். சகோதர சகோதரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கவலைகள் குறையும் வாரம் இது.
மீனம்
குடும்பத்தினரிடையே புரிதல் உண்டாக்க செய்த முயற்சிகள் நிறைவேறும். சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்களை தள்ளிப்போடுவது நல்லது. வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான தயாரிப்பு மும்முரமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நவராத்திரியில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை போன்ற வழிபாடுகள் இந்த நவீன யுகத்தில் அவசியமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ