உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Guru Udhayam Palangal: சுப கிரகமான குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Guru Udhayam Palangal: மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். அவர் இனி ஜூன் 6 ஆம் தேதி காலை 4:36 -க்கு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /8

குரு பகவான் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 

2 /8

மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். அவர் இனி ஜூன் 6 ஆம் தேதி காலை 4:36 -க்கு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

3 /8

குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

4 /8

மேஷம்: குரு உதயத்தால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். பணி இடத்தில் முன்னேற்றம் காணப்படும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

5 /8

கன்னி: தொழிலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வேலை எதிர்பார்த்ததை விட நல்ல பலனைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.  

6 /8

தனுசு: நிதி நிலை நன்றாக இருக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். பணத்தைச் சேமிப்பதற்கான புதிய வழிகள் உருவாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆற்றலும் நம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். 

7 /8

குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;   குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ'  என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.