ராகுவைப் போல் கொடுப்பாரில்லை கேதுவைப் போல கெடுப்பாரில்லை என்ற செலவாடையை அடிக்கடி கேட்டிருக்கலாம். நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேதுவைத் தவிர எஞ்சிய 7 கிரகங்களுக்கும் வாரத்தின் ஏழு நாட்களும் பிரத்யேகமாக ஒரு நாள் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு மற்றும் கேதுவுக்கு தனி நாள், கிழமை இஒல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணிநேரம் (மூன்றே முக்கால் நாழிகை) ராகு காலமாகவும், கேதுவின் காலமாக தினசரி வரும் எமகண்டமும் உள்ளது.


ராகு கேது என்ற இரு கிரகங்களும், ஒரே நாகத்தின் தலை பகுதியாக ராகுவும், வால்பகுதியாக கேதுவும் இருப்பதாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. ராகுவும் கேதுவும் எதிரெதிர் தன்மைகளை கொண்டிருப்பார்கள். முன் வினைகளின் வழியே உண்டாகும் ஆசைகளின் தொடர்ச்சியினை நிகழும் பிறப்பை அடைவதற்கான வீரியத்தையும் ஆற்றலைக் கொடுப்பவர் ராகு என்று சொல்லலாம்.


பிறப்புக்கான ஆற்றலுக்குத் தேவையான அறிந்து கொள்ளும் இயல்பு மற்றும் உள்ளுணர்வு என ஞானத்தை கொடுப்பவர் ஞானக்காரகர் கேது என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. கேதுவைப் போல கெடுப்பாரில்லை என்ற சொலவடை ஏன் வந்தது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆழ்மனதிற்கும் இடையே  எப்போதுமே யுத்தம்  நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மனப்போரினால் ஏற்படும் தோல்வி குறித்த அச்சம், தயக்கம் தடுமாற்றத்தைக் கொடுப்பவர் கேது பகவான். 


மேலும் படிக்க | பணம் வந்து கொட்டோ கொட்டனும்னு கொட்டனுமா? இந்த விஷயங்களை செய்துப் பாருங்க...


ஆனால், வாழ்க்கையினை முழுதும் அனுபவித்து வாழும் ஆசையை தூண்டி ராகு உத்வேகத்தைக் கொடுப்பார். உணர்வுகளை முன்னிறுத்தி ராகு தூண்டினால், மனதில் பல்வேறு எண்ணங்களை உருவாக்கி அதை தடுப்பார் கேது. இப்படி இந்த இரண்டு நிழல் கிரகங்களும் மனிதர்களை தங்கள் பக்கம் இழுத்து மன போராட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.


அதனால் தான், ராகு கொடுத்தால், கேது கெடுப்பார் என்பது ஆசையை கொடுப்பவர் ராகு என்றும், அதை புத்தியால் யோசிக்க வைத்து கெடுப்பார் கேது என்பதை குறிக்கும் சொலவடை தான் ராகுவைப் போல் கொடுப்பாரில்லை கேதுவைப் போல கெடுப்பாரில்லை.


ராகு ஆசையையும் அகங்காரத்தையும் உருவாக்கினால், கேதுவோ பயம், தயக்கம், குழப்பம் என பந்தாடுவார். ஆனால், 
இந்த குழப்பத்தை வெற்றி கொள்ளும் வழியையும் கேதுவே உருவாக்குவார் என்ற இடத்தில் தான் விதி என்ற ஒன்று வருகிறது.  
கேதுவின் தேடல் எப்போது இறை சக்தி துணையுடனே அமைந்திருக்கும். 


அதேபோல, ஒருவரின் தனித்தன்மையையும் முடிவு செய்பவர் கேது பகவான் தான். இதை சிலர் உலகத்தின் இயல்பான வாழ்க்கையையும் மீறி ஆடம்பரமாக வாழ்வதற்கும், சிலர் துறவு வாழ்க்கையைமேற்கொள்வதுமான தனித்தன்மையை முடிவு செய்பவரும் ஜாதகத்தில் கேது அமைந்திருக்கும் இடம் தான். 


எதிரிகளை, மனச் சோர்வுகளை, தடைகளை வெல்லும் மன வலிமையினை, கேது வழங்குவதும், கெடுப்பதும் ஜாதகத்தில் அவர் இருக்கும் இடம் தான் முடிவு செய்யும்.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க |64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ