மீனத்தில் இணையும் ராகு, புதன்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் கோடீஸ்வர யோகம்

Rahu Budh Yuti: புதன் மற்றும் ராகுவின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2024, 12:00 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்கள் ராகு மற்றும் புதனின் சேர்க்கையால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
  • குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவார்கள்.
மீனத்தில் இணையும் ராகு, புதன்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் கோடீஸ்வர யோகம் title=

Rahu Budh Yuti: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் இப்படி ராசிகளை மாற்றும்போது சில சமயம் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கை உருவாகின்றது. இப்படிப்பட்ட சேர்க்கைகளால் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. ராஜயோகங்கள் பெரும்பாலும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை அளிக்கின்றன.

இன்று கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மீன ராசியில் ஏற்கனவே ராகு இருக்கிறார். இதன் காரணமாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் இந்த இரு கிரகங்களின் சேர்க்கை நடக்கின்றது. . இதனால் ஒரு அபூர்வமான ராஜயோகம் உருவாகின்றது. புதன் மற்றும் ராகுவின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொருளாதார நிலை சீராகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus)

புதன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது நிதிநிலை மேம்படும். பண வரவு காரணமாக சேமிப்பு அதிகமாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த சமயத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் புதன் சேர்க்கை பல வித அற்புதமான பலன்களை அள்ளித் தரும். நிதிநிலை மேம்படும். வியாபாரத்தில் உள்ள கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முதலீடு செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள் இப்பொழுது அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | உதயமாகி நன்மை செய்வார் சனி: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் ஏற்றம், லாபம்

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு புதன் சேர்க்கை லாபகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது நிறைவடையும். அனைத்து பணிகளிலும் நல்ல லாபத்தை காண்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்கள் ராகு மற்றும் புதனின் சேர்க்கையால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவார்கள். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். லாபகரமான காலமாக இது இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்களுக்கு ராகு புதன் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம் பல வித சுப பலன்களை அளிக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை உச்சம், அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News