Makar Sankranti 2023: இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று, மகர சங்கராந்தி. குளிர் காலம் கழிந்து, சூரியன் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும் நாளையே மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். இந்தியாவின் பல்வேறு நகரங்களில், மகர சங்கராந்தி அன்று சூரிய பகவான் உடன் விஷ்ணு மற்றும் லட்சுமியையும் மக்கள் வழிபடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தமிழ்நாட்டில் நமது பொங்கல் பண்டிகைக்கு ஒப்பானது. அதேபோல் இந்த பண்டிகை, கேரளாவில் மகர சங்கராந்தி என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற அழைகப்பட்டாலும், பௌஷ் சங்கராந்தி அல்லது மொகோர் சோங்கராந்தி என்றும் அம்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றன. 


தானம் செய்ய ஏற்ற நாள்...


மேலும், அஸ்ஸாமில் மாக் பிஹு, இமாச்சலப் பிரதேசத்தில் மாகி சாஜி, ஜம்முவில் மாகி சங்ராந்த் அல்லது உத்தரைன் (உத்தராயணம்), ஹரியானாவில் சக்ரத், ராஜஸ்தானில் சக்ராத், மத்திய இந்தியாவில் சுகரத்,  குஜராத், உத்தரப் பிரதசேத்தில் உத்தராயணம், உத்தரகாண்டில் உள்ள குகுடி, பீகாரில் தஹி சூரா, காஷ்மீரில் ஷிஷூர் சென்க்ரத் என்றும் பெயர்களும், கொண்டாட்ட முறையும் வேறுபடுகின்றன. 


இந்த ஆண்டு, ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, சூரியன் இன்று (ஜன. 14) இரவு 8.21 மணிக்கு மகர ராசியில் நுழைகிறார். இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி உதய திதியை முன்னிட்டு மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று, மக்கள் ஆன்மீக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஏழை எளியோருக்கு நன்கொடை அளித்து தொண்டு செய்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற நாட்களை விட இந்த நாளில் தானம் செய்வதன் மதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | களைகட்டியது போகி கொண்டாட்டங்கள்! கொரோனாவுக்கு பிறகு கோலாகல பொங்கல்


மகர சங்கராந்தியை முன்னிட்டு உங்கள் ராசிக்கு ஏற்றபடி எதை தானம் செய்யலாம் என்பது குறித்து இதில் காணலாம். 


மேஷம்: வெல்லம், வேர்க்கடலை, எள் உடன் வெல்லம்


ரிஷபம்: அரிசி, தயிர், வெள்ளை துணி, இனிப்பான எள் விதை 


மிதுனம்: அரிசி, வெள்ளை மற்றும் பச்சை நிற போர்வைகள், பருப்பு


கடகம்: வெள்ளி, வெள்ளை எள் அல்லது கற்பூரம்


சிம்மம்: தாமிரம், இனிப்பான கோதுமை எள் இனிப்பு


கன்னி: பச்சை நிற போர்வைகள், கிச்சடி (அரிசி & பருப்பு)


துலாம்: சர்க்கரை, வெள்ளை துணி அல்லது பாயாசம் அல்லது கற்பூரம்


விருச்சிகம்: சிவப்பு துணி அல்லது எள்


தனுசு: மஞ்சள் துணி அல்லது தங்கத்திலான பொருட்கள் (பதிசா)


மகரம்: கருப்பு போர்வைகள், கருப்பு எள் அல்லது தேநீர்


கும்பம்: கிச்சடி, எள் அல்லது ராஜ்மா


மீனம்: பட்டு துணி, கொண்டைக்கடலை, பருப்பு அல்லது எள்


மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கல் பண்டிகை அன்று இந்த உணவுகளை ட்ரை பண்ணி பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ