சென்னை: ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான், சந்திர பகவானின் ராசியான கடக ராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். கடக மாதம் என்றும்  அழைக்கப்படும் ஆடி மாதத்தில் சூரியனின் சஞ்சாரத்தால் பல நன்மைகள் ஏற்படும். ஆடி மாதத்தில் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பித்துவிட்டது. ஆடி முதல்  மார்கழி வரையிலுமுள்ள ஆறு மாதங்களும் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆகும். ஆடி முதல் நாளான இன்று சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரியன் தட்சிணாயனத்தில் இருக்கும் இந்த மாதம் இறைவழிபாட்டில் சிறப்புடையது என்று சொன்னாலும், அம்மனுக்கும் உகந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படும் ஆடி, விவசாயத்திற்கும் உகந்த மாதம். விவசாயத்திற்கு ஆணிவேரான சூரியனின் மாற்றமும், அவருடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் வேளாண் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறும். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி, இது விவசாய நடவடிக்கைகளுக்கான மாதம் என்பதை உணர்த்துகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுதல், மற்றும் அம்மன் திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக் கிழமைகளும், செவ்வாய்க்கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


மேலும் படிக்க | சந்திரனின் ராசியில் சூரியனின் பயணம் 


ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள், ஆலயங்களில் உள்ள பாம்பு புற்றுக்கு பால் வார்க்கும் வழக்கமும் உண்டு.  


ஜூலை 16ம் தேதியன்று சூரியன் பெயர்ச்சி நடைபெற்ற நிலையில், உஷ்ணத்திற்கு அதிபதியான சூரியனும், குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் வீட்டில் இருப்பதால், இந்த மாதம் மிகவும் விசேசமானது. சந்திரன் மனோக்காரகர் என்று அழைக்கப்படுபவர் சந்திரன். சந்திரனே மனதிற்கு மட்டுமல்ல உடலுக்கும் அதிபதி என்பதால் சந்திரனின் ராசி மிகவும் முக்கியமானது. எனவே, சந்திரனின் வீட்டில் சூரியன் இருக்கும் இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.


சூரிய பகவான், சந்திர பகவானின் ராசியான கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதம் இது. சூரியனுக்கும் ஆடி மாதத்திற்கும் உள்ள முக்கியத்துவம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி மாத பிறப்பு என பல்வேறு பண்டிகைகள் வருகின்றன.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR