Sun Budh Transit: சூரியனும் புதனும் கடக ராசியில்: கும்பத்திற்கு அதிர்ஷ்டம்

Sun Transit 2022: இன்னும் ஓரிரு நாட்களில் சூரிய பகவானும், புத பகவானும் முறையே ஜூலை 16 மற்றும் 17 ஆம் தேதி கடக ராசியில் பிரவேசிக்கின்றனர். அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2022, 06:32 AM IST
  • சூரிய பகவானின் பெயர்ச்சியால் யாருக்கு என்ன நன்மை
  • கும்பத்திற்கு கருணை பார்வை பார்க்கிறார் சூரியன்
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரியபகவான் கருணை காட்டுவார்.
Sun Budh Transit: சூரியனும் புதனும் கடக ராசியில்: கும்பத்திற்கு அதிர்ஷ்டம் title=

கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி: சூரியன் ஜூலை 16, தேதியன்று, அதாவது இன்னும் ஓரிரு நாட்களில் கடக ராசியில் பிரவேசித்து ஒரு மாதம் தங்குகிறார். சந்திரன், கடக ராசிக்கு சொந்தக்காரன் என்பதால், சூரிய பகவான் சந்திரனின் விருந்தினராக சூரியன் இருப்பார்.

சூரியபகவானின் கடக ராசிக்கு செல்லும் நிலையால், வெவ்வேறு ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான விளைவுகள் ஏற்படும். கும்ப ராசிக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய சஞ்சாரம் சாதகமாக இருக்கும், செல்வம் பெருகும்
 ஜூலை 16-ம் தேதி 12 ராசிகளிலும் சூரியப் பெயர்ச்சியின் தாக்கம் வித்தியாசமாகத் தெரியும். இப்படிப்பட்ட நிலையில் கும்ப ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் எல்லா வகையிலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

தொழிலதிபர்களைப் பொறுத்த வரை அவர்களின் வியாபாரமும் வெகுவாக முன்னேறும். இந்தக் காலக்கட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும், எந்தத் திட்டத்தை எடுத்தாலும் நல்ல வருமானம் கிடைக்கும். அவர்களுக்கு நற்பெயர் அதிகரிக்கும். இதன் விளைவாக, மகிழ்ச்சியான வாழ்க்கையிஐ வாழ்வார்கள்.

மேலும் படிக்க | அஷ்டலஷ்மி யோகத்தால் ஆனந்த வாழ்வு வாழும் ஜாதகர்கள்

குடும்பத்தில், நிம்மதியும் செழிப்பும் முன்பை விட அதிகரிக்கும். எதற்கும் குறைவில்லாத வகையில் புதிய வகைப் பொருட்களை வாங்கும் வாய்ப்பும், ஆடை ஆபரணங்களில் அதிக முதலீடும் செய்வீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியின் உச்சத்தைக் கொடுக்கவிருக்கிறார் சூரிய பகவான்.

நிலம், சொத்து, அலுவலகம், வியாபாரம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால், எதிரிகளுக்கு தோல்வியும், உங்களுக்கு எதிர்பாராத வெற்றியும் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும்.  அலுவலகத்தில் யாரேனும் ஒருவரின் புகாரின் பேரில் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தால், இப்போது புகார்தாரரே வந்து மன்னிப்பு கேட்பார் என்ற அளவுக்கு உங்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது.

நோய் பாதிப்பு ஏதேனும் இருந்தால், நோய் உங்களை விட்டு விலகும். நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு, சிகிச்சை மூலம் குணம் ஏற்பட்டு, ஆரோக்கியமாக இருக்கலாம். 

மேலும் படிக்க | ஆண்களுக்கான மாங்கல்ய தோஷமும் அதற்கான பரிகாரங்களும்

தடைப்பட்ட வேலைகள், அறிமுகம் உள்ள அரசு அதிகாரிகள் மூலம் எளிதாக செய்து முடிக்கப்படும். குடும்பம் மற்றும் வணிக விஷயங்களிலும், அரசாங்க அதிகாரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும். பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டாலும் பிறரின் சிபாரிசு உங்களுக்கு உண்டு. மலை போல் இருந்தாலும் பிரச்சினைகளை மடு போல் தீர்க்கும் சுப பலன்களையே கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் தரவிருக்கிறார்.

உங்கள் திறமை அனைவருக்கும் வெளிப்படும் நேரம் இது. எனவே, பாராட்டுகள் குவிவதோடு தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக சூரியனின் ராசி மாற்றம், உங்களுக்கு பல வகையான சுப தகவல்களை கொண்டு வருகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News