சந்திரனின் ராசியில் சூரியனின் பயணம்: அமாவாசை யோகக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

Sun Transit on House of Moon: சந்தரனின் வீடான கடக ராசிக்கும் செல்லும் சூரிய கிரகத்தின் தாக்கம் என்ன செய்யும்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2022, 03:39 PM IST
  • ஜூலை 16, 2022 சனிக்கிழமையன்று சந்திரனின் ராசிக்கு செல்கிறார் சூரியன்
  • கடக ராசியில் சூரியன் நுழைவது ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்
  • ஒரு மாதம் கடக ராசியில் இருந்து ஆட்சி புரிவார் சூரியன்
சந்திரனின் ராசியில் சூரியனின் பயணம்: அமாவாசை யோகக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட் title=

சூரியன் ராசி மாற்றம் 2022 ஜூலை 16: ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் சூரியன், நாளை சந்திரனின் கடக ராசிக்கு மாறுகிறார். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு தான் இராசி எனப்படுகிறது. சந்திரன் சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை. சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது. சந்திரன் மனோக்காரகர் என்று அழைக்கப்படுபவர் சந்திரன். சந்திரனே மனதிற்கு மட்டுமல்ல உடலுக்கும் அதிபதி என்பதால் சந்திரனின் ராசி மிகவும் முக்கியமானது. எனவே, சந்திரனின் வீட்டில் சூரியன் இருக்கும் இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.

ஜோதிடப்படி மாத்ருகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரன் தான், வெளிநாடு பயணம், அறிவு, ஆனந்தம், கலை நுணுக்கம், புகழ், அழகு, சுகபோகம் என அனைத்திற்கும் காரண கர்த்தா.சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு வீடுகளை சனி கடக்கும் ஏழரை ஆண்டு காலத்தையே ஏழரை நாட்டுச் சனி என்று கூறுகிறோம்.

மேலும் படிக்க | மன்னிக்க மனமில்லாதவர்களின் மன நிம்மதியை சொல்லும் ஜாதகம்: சனியின் தாக்கம்

இப்படி மிகவும் முக்கியமான சந்திரனின் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூலை 16ம் தேதியன்று சூரியனின் பெயர்சி நடைபெறுகிறது. அதிலும், சூரியன், சந்திரன் இருவரும் ஜாதகத்தில் ஒரே வீட்டில் இருப்பது. அமாவாசை யோகமாகும். சந்திரனால் கிடைக்கும் யோகங்களில் அமாவாசை யோகத்தைத்தவிர, சந்திர மங்கள யோகம், கஜ கேசரியோகம் என பல யோகங்கள் உண்டு.

உஷ்ணத்திற்கு அதிபதியான சூரியனும், குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனும் எதிரெதிர் குணங்களை கொண்டவர்கள் என்பதும், இந்த இரண்டு கிரகங்களையும் சிவசக்தி சொரூபமாக குறிப்பிடுவார்கள் என்பதும் ஆச்சரியமான விஷயம். அதுமட்டுமல்ல, ஒருவைன் வலது கண்ணிற்கு சூரியன் அதிபதி என்றால், இடது கண்ணின் ஆளுமை சந்திரனுக்கு உரியது என்பதும் கூடுதல் தகவல். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சேர்ந்து இருக்கும் தினம் தான் அமாவாசை. 

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை

கடக ராசியில் சூரியன் சந்திரன் இணைந்தால் ஏற்படும் அமாவாசை யோகம் பெற்றவர்களுக்கு அதிக அறிவாற்றல் இருக்கும், திறமைசாலியாக இருப்பதும் இயல்பானது. சந்திரனின் பலமும், அமாவாசை யோகமும் இணைந்திருந்தால், அதில் சூரியனின் பாவகமும் வலுத்திருந்தால் அவர்கள் மிகவும் யோகக்காரர்களாக இருப்பார்கள்.

அமாவாசை யோகத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சாமர்த்திய சாலிகளாக இருப்பார்கள். தங்களுடைய ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதில் தயங்கவே மாட்டார்கள். வெளிப்படையாக பேசுவதுபோல் தெரிந்தாலும் மறைக்க வேண்டிய விஷயத்தை மறைப்பதில் வல்லவர்கள்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் தாக்கத்தால் இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 7 வரை எச்சரிக்கை காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News