ஜோதிடத்தில், ஒரு நபரின் பொதுவான குணங்கள் மற்றும் தன்மையைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு அவர்களின் ராசிகளே போதும். ஒருவருடைய ராசி அவர் பணக்காரனாக வாழ்வாரா அல்லது ஏழையாக வாழ்வாரா என்பதைக் கூறுகிறது. மொத்தமுள்ள 12 ராசிகளில் 5 ராசிகளை சேர்ந்தவர்கள், நிறைய சம்பாதித்தாலும் ஏழைகளாகவே இருப்பார்கள், பணம் எப்போதும் அவர்களை விட்டு விலகி நிற்கும் நிலைக்காது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமானம் செலவு சேமிப்பு


பணக்காரராக இருக்க வேண்டும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பமாகும். ஆனால் பலர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து பணத்தை சேமித்து வைப்பதில்லை. அது சிரமமான நேரங்களில் கஷ்டத்தைக் கொடுக்கும். எவ்வளவு வேகமாக சம்பாதிக்கிறார்களோ, அவ்வளவு வேகமாக செலவு செய்யும் ராசிக்காரர்களும் உண்டு.


ஆடம்பர செலவு


நிறைய சம்பாதித்தாலும் மாதக் கடைசியில் கையில் பணம் இல்லை என்று சொல்பவர் நீங்களா? இல்லை, அப்படி கேட்பவர்களுக்கு கடன் கொடுத்து உதவுபவரா நீங்கள்? உங்கள் ராசி என்ன?  


மேலும் படிக்க | கும்பத்தில் 3 பெரிய கிரகங்களின் சேர்க்கை, இந்த 3 ராசிக்காரர்கள் சரவெடி ஜாக்பாட்


இந்த ராசிக்காரர்களிடம் பணம் இருக்காது


மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்கள் அதிக செலல்வு செய்பவர்கள். சில சமயங்களில், சமூகத்தில் தங்களை உயர்த்திக்காட்டிக் கொள்வதற்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். அதோடு, எப்போது, ​​​​எங்கு, எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்ற புரிதல் மிதுன ராசியினரிடம் குறைவாக உள்ளது. அதனால்தான் பணம் அவர்கள் கையில் தங்குவதில்லை.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்காக அதிக பணம் செலவழிப்பார்கள். தனக்காக மட்டும் பணம் செலவழிக்காமல், மற்றவர்களுக்காகவும் அதிகம் செலவு செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சம்பாதிக்கும் காலத்தில் எதையும் சேமிப்பதில்லை. விலை உயர்ந்த பொருட்களை விரும்பும் இவர்கள், தேவையில்லாமல் ஷாப்பிங் செய்வார்கள்.


மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அமோகமான வாழ்வு


துலாம்: துலாம் ராசிக்காரர்கள் அனைத்து விஷயத்திலும் மிகவும் சமநிலையாக இருந்தாலும், பணத்தை நிர்வகிப்பதில் தவறு செய்பவர்கள். இதனால், பெரிய அளவில் சம்பாதித்தாலும், சேமிக்க முடியவதில்லை. கொஞ்சம் கவனமுடன் செயல்பட்டால், அவர்கள் நிறைய செல்வத்தை சேகரிக்க முடியும்.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள், அதற்காக பணத்தை தண்ணீர் போல செலவிடுவார்கள். இவர்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் செலவழித்தாலும் மற்றவர்களுக்கு செலவு செய்வதில் மிகவும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். 


கும்பம்: கும்ப ராசிக்காரர்களும் அதிகம் செலவு செய்வார்கள். அடிக்கடி எதையாவது வாங்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த மக்கள் ஷாப்பிங் செய்வதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். இதன் காரணமாக, பணத்தை சேமிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைவதில்லை.


மேலும் படிக்க | சனி உதயம்: இந்த ராசிகளுக்கு அதிரடி அதிர்ஷ்டம், சரவெடி வெற்றி, உங்க ராசி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ