ஒரே நாளில் 12 விக்கெட், தொடரும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் குவித்துள்ளது!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் குவித்துள்ளது!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இச்சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி பிரிமிக்ஹான் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 80(156) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 0(9) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 25 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை குவித்தார்.
இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதுமே அணித்தலைவர் ஜோ ரூட் ரன்அவுட் ஆனார். இவரையடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் நின்று விளையாடுவதற்கு முன்னதாக ஸ்டவார்ட் போர்ட் 1(7) ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து வெளியேற அணித்தலைவர் கோலி நிதனமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய கோலி 149(225) ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் இந்தியா 76 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து தனது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக் 0(14) ரன்களில் வெளியேற இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து தற்போது 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது.