புதுடெல்லி: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC - ஐ.சி.சி) டெஸ்ட் போட்டியை ஐந்து நாட்களுக்கு பதிலாக 2023 முதல் 4 நாட்கள் மட்டும் நடத்த தீவிரமாக பரிசீலிப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்து எதிர்வினைகளும் வந்தன. ஆனால் அப்பொழுது பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுக்குறித்து எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. ஆனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார். தற்போது பி.சி.சி.ஐ அமைப்பும் ஐ.சி.சி. முடிவுக்கு உடன்படவில்லை எனத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கருத்தை ஆதரிக்கும் பி.சி.சி.ஐ:
கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கருத்துடன் ஒத்துழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது விராட் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து பேசிய விராட் கோலி, டெஸ்ட் போட்டி நாட்களை மாற்றக்கூடாது. அப்படி செய்தால், அது டெஸ்ட் போட்டியின் பாரம்பரியத்தை கெடுத்து விடும். பகலிரவு டெஸ்ட் போட்டியே மிகப்பெரிய மாற்றம். ஐந்து நாட்களில் இருந்து நான்கு நாட்களாகக் குறைப்பதில் எனக்கு விரும்பவில்லை. இதுபோன்ற ஆலோசனைகளை நான் ஆதரிக்கவும் மாட்டேன், வரவேற்கவும் மாட்டேன். ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டியே உயர்ந்தது எனக் கூறியிருந்தார்.


இந்த பிரச்சினை குறித்த கலந்து ஆலோசனை செய்யப்படும்:
ஜனவரி 12 ம் தேதி மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் விருது வழங்கும் விழாவில் பி.சி.சி.ஐ கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈ.சி.பி) உடன் விவாதிக்கும் என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறினார். அதேவேலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கருத்துக்கு ஆதரவாக உள்ளது எனவும் கூறினார். ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்கள் எனக் குறைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை இன்று அதிகாரி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் மட்டும் எதிர்ப்பு இல்லை..:
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் மட்டுமே இதை எதிர்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உட்பட பலரின் கருத்துக்களை பார்த்தால், அவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் மேற்கோள் காட்டினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.