டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒற்றை உலகக்கோப்பைக்கு தற்போது நான்கு அணிகள் முட்டி மோதிக்கொண்டு, அரையிறுதியில் முழு உத்வேகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த செப். 16ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடருக்கு, இன்றும் (நவ. 7), நாளையும் (நவ. 8) ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி போட்டியாக இந்தியா - ஜிம்பாப்வே போட்டி நடத்தப்பட்டது. அதில், சூர்யகுமாரின் அதிரடியான வாணவேடிக்கையால் இந்திய 186 ரன்களை குவித்து, அந்த போட்டியை 71 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. 


நேற்றைய போட்டியில், வெறும் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரகள் என மொத்தம் 61 ரன்களை குவித்து அசத்திய சூர்யகுமார் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். மைதானத்தின் எட்டுத்திக்குகளிலும் நேற்று பந்துகளை பறக்கவிட்ட சூர்யகுமார், இந்தியாவை கோப்பையை வெல்லும் கனவின் மிக முக்கிய துருப்புச்சீட்டாக பார்க்கப்படுகிறார். 


மேலும் படிக்க | டிவில்லியர்ஸை ஓரங்கட்டிய இந்தியாவின் 360


மேலும், நாலாபுறமும் ஷாட்களை ஆடும் சூர்யகுமாரிடம், 'தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ்-க்கு பிறகு 'Mr.360' என்ற பட்டம் உங்களுக்குதான் பொருத்தமாக இருக்கும்' என வர்ணனையாளர் கூறியதற்கு சூர்யகுமார் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து,'கிரிக்கெட்டில் ஒரே ஒரு Mr.360 தான். அது ஏபி டிவில்லியர்ஸ் மட்டும்தான். நான் அவரை போன்று விளையாட முயற்சிக்கிறேன்" எனக் கூறியிருந்தார். 



இதற்கு ஏபி டிவில்லியர்ஸ் நேற்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். "அந்த இடத்திற்கு (Mr.360 பட்டத்திற்கு) மிக அருகில் வந்துவிட்டீர்கள். மிக விரைவில் வந்துவிடுவீர்கள். இன்று சிறப்பாக விளையாடுனீர்கள்" என பாராட்டு தெரிவித்துள்ளார். 


டி20 போட்டிகளில் ஓர் ஆண்டில், 1000 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் நேற்று படைத்தார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், 5 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார், 3 அரைசதங்களுடன் 225 ரன்களை குவித்து, தொடரில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், 3 அரைசதங்கள் உள்பட 246 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது. 


மேலும் படிக்க | தோனி எனக்கு அனுப்பிய மெசேஜ் இது தான் - விராட் கோலி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ