இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்த 35 வயதாகும் சானியா, "எனக்கு வயதாதி வருகிறது. உடல் சோர்வு இருக்கிறது. இன்றைய போட்டியில் கூட என் முழங்கால் வலியுடன் தான் விளையாடினேன். போட்டியில் தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம் என்று கூற முடியாது என்றாலும், காயங்கள் குணமடைய அதிக நாட்கள் ஓய்வும் கவனிப்ப்பும் தேவைபடுகிறது. இதைவிட, போட்டியில் கலந்து கொள்ள நீண்ட தூரப் பயணம் மேற்கொளகையில், எனது 3 வயது மகனை அழைத்து வருவதால், அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறேனோ என்கிற பயம்  என்னை சூழ்கிறது” என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்திய டென்னிஸ் வரலாற்றில் தனக்கென தனக்கென தானி இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ள சானியா, பெண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார். இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். 



மற்றொரு இந்திய நட்சத்திரம் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் (2009), பிரெஞ்ச் ஓபன் (2012) போட்டிகளை வென்றார் சானியா மிர்சா. ஸ்லாம்ஸில் அவரது மூன்றாவது கலப்பு 2014 அமெரிக்க ஓபனில், பிரேசிலிய வீரர் புருனோ சோரெஸுடன் இணைந்து பட்டம் வென்றார்.


ALSO READ | 2022-ல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் கத்துக்குட்டி அணிகள்..!


இந்தியா உருவாக்கிய சிறந்த இரட்டையர் வீராங்கனைகளில் சானியாவும் ஒருவர். 2015 விம்பிள்டன் மற்றும் 2015 அமெரிக்க ஓபன் பட்டங்களை சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ் வென்றனர். இந்த ஜோடி 2016 ஆஸ்திரேலிய ஓபனில்  மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது. 


ALSO READ | IPL 2022: க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா? பயிற்சி வீடியோ வைரல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR